Saturday, February 19, 2011

பிரபாகரனை காந்தி சந்திக்கும் சர்ச்சை கதை; தணிக்கை குழு எதிர்ப்பு



முதல்வர் மகாத்மா என்ற பெயரில் புதுப்படம் தயாராகியுள்ளது. அ.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காமராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து காமராஜ் படத்தை எடுத்தவர். காந்தி மீண்டும் பிறந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை கருவாக வைத்து முதல்வர் மகாத்மா படம் உருவாகியுள்ளது. இதில் காந்தியாக கனகராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை காந்தி சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியது. ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க முதல்-அமைச்சராக இருக்கும் காந்தி பிரபாகரனை சந்திக்க அழைப்பு விடுக்கிறார். இருவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றி விவாதித்து முடிவு எடுப்பது போன்று இக் காட்சிகள் உள்ளன.

அப்போது பிரபாகரன் கையில் இருக்கும் துப்பாக்கியை காந்தியடிகள் வாங்கி பார்ப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த படம் நான்கு உறுப்பினர்களை கொண்ட அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் காந்தி பிரபாகரன் சந்திக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியாது என்று தடை விதித்தனர்.

இதையடுத்து பத்து உறுப்பினர்களை கொண்ட உயர் நிலை தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். விரைவில் இது ரிலீசாக உள்ளது.

http://www.maalaimalar.com/2011/02/18172406/prabhakaran-meet-gandhi-story.html

சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment