இசைப்புயலுக்கு இன்று பிறந்த நாள்... (சிறப்பு வீடியோ)

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட தமிழ் திரையுலகினர் இன்று வாழ்த்து தெரிவித்தனர். ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மானின் கேரியர் கிராப் எங்கேயோ போய்விட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்த அவர், பின்னர் இந்திக்கும் போனார். இந்தியில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளர் என்ற புகழ் பெற்றார். அவர் இசையமைத்த இந்திப் படங்களின் பாடல்களை வெளியிடுவதில் இசை வெளியீட்டு நிறுவனங்கள் மத்தியில் ஏக போட்டி. பின்னர் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார். ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படத்துக்கே இசையமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார் ரஹ்மான். நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருதினை வென்றார். அதே படத்தின் இன்னொரு பாடலுக்கு பாடலாசிரியர் குல்சாருடன் இணைந்து மேலும் ஒரு ஆஸ்கர் விருதினைப் பெற்றார் ரஹ்மான். ரஹ்மானின் மனைவி பெயர் சாய்ரா. கதீஜா, ரஹ்மா என இரு மகள்களும், அமீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். மகள் கதீஜா ஏற்கெனவே எந்திரன் படத்தில் புதிய மனிதா... பாடலை எஸ்பிபியுடன் பாடியுள்ளார். சிறுவன் அமீனும் பாடகராக அடியெடுத்து வைத்துள்ளான்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment