Monday, March 14, 2011
அனுஷ்கா எனக்கு அம்மா மாதிரி என பல்டி அடித்து காதலை முறித்த காதலன்.....!!
அனுஷ்காவும் இயக்குனர் க்ரிஷ்ஷும் காலிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் இயக்கியவர் க்ரிஷ். இவர் தெலுங்கில் இயக்கிய வேதம் மெகா ஹிட் ஆனது.
அதில் அனுஷ்கா ஹீரோயின். அதே படத்தைப் இப்போது தமிழில் சிம்பு நடிக்க வானம் என்ற பெயரில் எடுத்து வருகிறார் க்ரிஷ். இதிலும் அனுஷ்கா தான் ஹீரோயினாக நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்ட போது, இருவருமே எந்த மறுப்பும் சொல்லாமலே இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது இயக்குனர் க்ரிஷ் அதை மறுத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாது அனுஷ்கா எனது அம்மா மாதிரி என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு மட்டுமே இருந்து வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் சிம்பு அனுஷ்கா நடிக்கும் வானம் படம் விரைவில் வெளிவரும் என்றும் அதில் அவர்கள் இருவரும் ஆடிய குத்துப்பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment