Saturday, March 31, 2012

கணவனை வைத்து தமிழில் - A - படம் எடுத்த ஒரே மனைவி ஐஸ்வர்யா தான் !

தனுஷ் நடித்த 3 படத்திற்கு "A" சான்றிதழ் கிடைத்துள்ளது, இதில் காணப்படும் அதிகபட்ச ரொமான்ஸ் காட்சிகளால் இந்த படம் வயது வந்தவர்களுக்கான படமாக சென்ஸார் அதிகாரிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது, எனினும் இதில் உள்ள ரொமான்ஸ் காட்சிகளை அகற்றினால் "U" சான்றிதழுடன் படம் வெளியிடப்படும், புருசன வைச்சு பிட்டு படம் எடுத்த முதல் மனைவி ஐஸ்வர்யா தான் , வாழ்க உன் புகழ் கொலவெறி உள்ள வரை!

3 (மூன்று)

கொலவெறிப் பாடல் ரிலீஸான சமயத்திலேயே இந்த 3 படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் போய் பார்க்கக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டேன்.தியேட்டரில் நல்ல கூட்டத்துடன் கியூவில் நின்று படம் பார்க்கும் அனுபவமே தனி. இன்று காலை ஒரு பி செண்டர் தியேட்டரில் நண்பகல் 12 மணி காட்சிக்காக 11 மணிக்கே போய் நின்றேன். பெரிய கூட்டம் இல்லையென்றாலும் நேரம் ஆக ஆக ஹவுஸ்ஃபுல் ஆகும் அறிகுறி தெரிந்தது. எல்லாம் +2, கல்லூரி மாணவ,மாணவிகள். 25 ரூபாய் டிக்கட்டை கவுண்டரிலேயே 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். அந்தக்கொள்ளை போதாதென்று டூ வீலர் பார்க்கிங் 20 ரூபாய். இப்படிப்பட்ட எரிச்சலான மனநிலையில் உள்ளே போவதால்தான் சுமாரான படங்களைக் கூட மக்கள் மொக்கைப்படம்டா போயிடாத என்று மெஸேஜ் அனுப்புகிறார்கள். குப்புற விழுந்துகிடக்கும் தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்த விரும்பும் புண்ணியவான்கள் தங்கள் பணியை இந்த மாதிரியான தியேட்டர்களிலிருந்து தொடங்கவேண்டும் என்பது அடியேனின் ஆசை. ***************** இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், காதலர்கள் எங்கே போய் தாலி கட்டிக்கொள்ளலாம் ? 3 பட டிஸ்கசனில், அறிமுக இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கேள்வி. ரிஜிஸ்தர் ஆபீஸ் மேடம் இது ரொம்ப பழைய ஸ்டைல்பா... குலதெய்வம் கோயில்ல மேடம்.. அப்பிடி பல தெய்வத்தைப் படங்கள்ல பாத்தாச்சி. வேற ஏதாவது இண்ட்ரஸ்டிங்கா... கல்ச்சர் ஷாக் குடுக்குற மாதிரி ? அப்ப நாம குடிகாரங்க கூத்தடிக்கிற டிஸ்கொத்தே பார்ல தான் மேடம் வைக்கணும் சூப்பர் .. நாம நம்ம கதையில தனுஷுக்கும்,ஸ்ருதிக்கும் நடக்கிற கல்யாணத்தை பார்ல தான் வக்கிறோம். தமிழனுக்கு கல்ச்சர் ஷாக் குடுக்கிறோம். இதற்கு முன்பு செல்வராகவன் வகையறாக்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்டிலேயே தமிழர்கள் தவித்து தண்ணி குடித்தது போதாதென்று, இப்போது அந்த குடும்பத்து மருமகளான ஐஸ்வர்யா மேற்படி திருமண காட்சியை ஒரு வடம் சைஸில் தாலி செய்து, டிஸ்கொத்தே பாரில்தான் அரங்கேற்றியிருக்கிறார்.மாப்பிள்ளையும் பொண்ணும் பீர் கிளாஸை கையில் வைத்துக்கொண்டு சியர்ஸ் சொன்னபடியே தாலிகட்டிக்கொள்கிறார்கள். சரி,3 கதைக்கு வருவோம். +2 படிக்கும்போது, ஒரு மழைநாளில்,சைக்கிள் செயினை மாட்டி உதவப்போகும் வேளையில், முதல் பார்வையிலேயே ஸ்ருதி மீது காதல்கொள்கிறார் தனுஷ். சரி,நம்மள மாதிரி பெரிய இடத்துப்பிள்ளையாச்சே என்று பெரும் எதிர்ப்பு காட்டாமல் ஸ்ருதி சம்மதிக்க, கொஞ்ச காலம் காதலித்து, அப்புறம் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள். வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போதே, ஸ்ருதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறார் தனுஷ். அப்புறம் க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில், நம்மை டைரக்டர் ஐஸ்வர்யா டார்ச்சர் பண்ணுவது போல், பச்சைக்கலரில் நாலைந்து உருவங்கள் தொடர்ந்து வந்து டார்ச்சர் கொடுக்கவே, தாங்க முடியாத வெறிகொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொல்கிறார் தனுஷ். நடுவில் நடந்தது என்ன வெண் திரையில் பாருங்கள்.. படத்தின் முதல் காட்சியிலேயே, தனுஷின் சடலத்துக்கு எல்லோரும் மாலை போட்டுக்கொண்டு போவது போல் காட்டியதாலோ என்னவோ, படத்துக்கு பாடை கட்டும் ஒருவித ஃபீலிங் அங்கிருந்தே துவங்கி விடுகிறது. ஆனால் அதற்காக ஐஸ்வர்யாவை ஒரேயடியாக மொக்கை டைரக்டர் என்று சொல்லிவிடமுடியவில்லை. படத்தின் முதல் பாதியில் வரும் சில காதல் காட்சிகள், அக்காவின் காதலுக்கு எப்போதுமே கட்டை விரலை ரெடியாக தூக்கி காத்திருக்கும் குட்டி ஊமைத்தங்கச்சி, அதிலும் அவள் அக்காவின் காதலுக்கு ஓ.கே.சொல்லச்சொல்லி, அப்பாவிடம் முதல் முறையாக பேச ஆரம்பிக்கும் காட்சி என்று சில இடங்களில் தேர்ந்த டைரக்டருக்கான முத்திரைகள் பதித்திருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அப்புறம் தனுஷுக்கு யாருக்கும் தெரியாத மூனாவது ஒன்று இருக்கிறது என்று ஆரம்பித்து தனுஷையும், நம்மையும் ஒரே சமயத்தில் அந்த ஷொபியோபொபிஅயுமேனியா நோய்க்கு உட்படுத்தி இம்சிக்க ஆரம்பித்துவிடுகிறார். நடிப்பு என்று வரும்போது தனுஷ் ஒவ்வொரு படத்திலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து போவதற்கு,பல காட்சிகள் சாட்சிகளாகின்றன.ஸ்ருதியையும் சும்மா சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர் பேசும் தமிழ் சதா மப்பில் இருப்பது போலவே ஒரு மனப்பிராந்தி. இவர்கள் இருவரையும் ஜோடிகளாகப் பார்க்கும்போது, அவர்கள் காட்டும் நெருக்கத்தில் கெமிஷ்ட்ரி,ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாமே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகிறது. தனுஷின் நண்பர்களாக வரும் சிவகார்த்திகேயனும்,சுந்தரும் சரக்குக்கு ஏத்த சைடிஷ்கள். முதல் பாதியில் மட்டும் வந்து தனுஷை தொடர்ந்து லந்து தரும் சிவகார்த்திகேயன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.தனுஷின் இம்சைக்காக டுடேரியல் காலேஜில் போய் அமர்ந்து கொண்டு,டேய் மச்சான் அவன் படிக்கிறாண்டா என்று அதிச்சி அடைவதும்,... தனுஷ்,ஸ்ருதி நேத்து எனக்கு திடீர்னு முத்தம் குடுத்துட்டு ஓடிபோயிட்டாடா என்றவுடன் எவன் கூட? என்று கவுண்டர் அடிப்பதும் சிவகார்த்திகேய ஸ்பெஷல்கள். தனுசுக்காக படம் முழுக்க விவஸ்தையற்ற பல அவஸ்தைகளை சந்திக்கும் சுந்தர், போதையிலும் சரி, சும்மா இருக்கும்போதும் சரி, தனுஷைப்பார்த்து சுமார் 100 முறையாவது மச்சான் பேசாம ஆஸ்பத்திரில சேர்ந்துரலாம் மச்சான் என்கிறார். ஆனால் அதை ஏன் தனுஷ் அலட்சியம் செய்கிறார் ? ஒருவேளை அப்படி தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால், கதைக்கு எங்கே போவது என்று கன்ஃபியூஸ் ஆகிவிட்டாரோ டைரக்டர் . வொய் திஸ் கொலவெறி தவிர்த்த படத்தின் மற்ற பாடல்களும், பின்னணி இசையும்,சத்தியமா நான் ஒன் சாங் ஒண்டர் தானுங்கண்ணா என்று அனிருத்தை பக்காவாக பறை சாற்றுகின்றன. ஸ்கூல் காட்சிகளில் ஒளிப்பதிவும் கூட கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமா இருக்கட்டும் என்று வேண்டுமென்றே செய்தாரோ என்னவோ, இடைவேளைக்குப்பிறகு படு மெச்சூரிட்டியான பதிவு வேல்ராஜுவுடையது. நாட்டில் சைக்கோக்கள் அதிகமாகிவிட்டார்கள் என்பதற்காக எதற்கெடுத்தாலும் எங்களைப்பற்றியே படமெடுப்பதை நாங்கள் விரும்புவதில்லை தனுஷ், ஐஸ்வர்யா அவர்களே! ****************************** 3 பின்குறிப்புகள் ; உங்களையும் என்னையும் விட தனுஷ் ரொம்பவே புத்திசாலி, மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தான் நடிப்பது இதுவே கடைசி என்று அவர் அறிவித்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2.மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று ரகஸியமாகப்பார்ப்பதற்காக இன்று அனிருத், ஒரு தியேட்டருக்கு தனியாகப் போனாராம். கான்வெண்ட் படிக்கிற பசங்கள்லாம் தனியா நாட் அல்லவுட் என்று தியேட்டர் நிர்வாகம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாம். 1.ஆளாளுக்கு ரொம்ப கிண்டல் பண்றாங்க என்பதால்,இனி சுண்டல் விக்கிறவனாக்கூட நடிக்கத்தயார் ஆனா அடுத்து ஒரு பத்து வருஷத்துக்கு மெண்டலா மட்டும் நடிக்க யாரும் என்னைக்கூப்புடாதீங்க என்று மத்தியான வெயிலில் மரினா பீச்சிலிருந்து கத்த வேண்டும் போல இருக்கிறதாம் தனுஷுக்கு..

Sunday, March 25, 2012

நிர்வாண கோலத்தில் விளையாட்டு! (கிளு கிளுப்பு வீடியோ இணைப்பு)

இந்த உலகம் நவ நாகரீக வாழ்வை நோக்கி படு வேகமாக வளர்ச்சி அடைந்த சென்றாலும் தற்போது நாம் ஆதிகாலத்தை நோக்கி நகர்வதாற்கான சில ஏதுநிலைகள் காணப்படுகின்றதோ என்று தோண்றும் அளவுக்கு இருக்கின்றது இன்றை மனித வாழ்வு…. அப்படி என்ன தான் என்று கேட்கின்றீர்களா? அண்மையில் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற பெற்ற விருத்து உபசாரம் ஒன்றில் பங்கு பற்றியவர்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் பங்கு கொண்டு அங்கு இடம்பெற்ற களியாட்டங்களில் கலந்து கொண்டதுடன் விளையாட்டுங்களிலும் கலந்து கொண்டுள்ளனர். இந் நிகழ்வில், கைதொலைபேசி, கமரா, மது என்பவற்றுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கலாச்சாரம் சீரழிந்து சென்றால் மனித வாழ்வின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அமெரிக்க செனட் சபையில் இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஸ்டீபன் ராப்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்திருந்தார். இலங்கை தொடர்பாக, தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். இந்தப் பயணத்தின் அடிப்படையிலேயே அவர் செனெட் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Monday, March 19, 2012

களத்தில் குதித்தார் ஹிலாரி!! அதிர்ச்சியில் உறைந்தது இலங்கை!!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ் விவகாரத்தை நேரடியாகக் கையாள்வதற்காக தற்போது களத்தில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை, இலங்கை பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த இலங்கை தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை, தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கைக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சூழிலிலேயே, இலங்கையினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வாஷிங்டன் வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு, ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்காத நிலையில், தற்போது இலங்கை அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது

இலங்கைக்கு எதிரியானது இந்தியா! பாராளுமன்றில் தெரிவித்தார் மன்மோகன்!!

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற விடயத்தில் இந்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மேற்படி தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் பலத்த ஆர்ப்பாட்டங்களும், கொடுப்பாவிகள் எரிப்பும் நடந்தேறிய வண்ணம் உள்ளன. இந் நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்

youtube விடியோவில் என் கண்ணுக்கு தென்பட்ட இலங்கையில் புத்தளத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.facebookலும் உலாவி வருகின்றது உங்கக்களுக்கு அது,