Tuesday, April 16, 2013

வன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்

இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது. இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்கு கிடைத்த செய்தியாகப் பகிர்ந்திருந்தார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன் என்னிடமும் அந்த கலன்கள் இருக்கிறது. அப்படியானால் எனக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பிருக்கிறதா? புலிகள் பயன்படுத்தினார்கள் என்றால் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? இது பற்றி வைத்தியசாலை ஒன்றினுள் வேலை செய்தவரிடம் கேட்டிருந்தாலே முழுத்தகவலும் கிடைத்திருக்குமே. 5 நாளுக்கு மேல் சாப்பிடாமல் களத்திலிருந்து காயப்பட்டவளும் இருக்கிறார்கள். ஒரு நாள் வயிற்றோட்டத்திற்கே 3 சேலைன் ஏற்றியவர்கள் இருக்கையில் எத்தனையோ நாள் ஒழுங்கான நீர் இன்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். காயத்தால் குருதி வெளியேறியிருக்கும் அதை ஈடு செய்வதற்கு முன்னர் அவர்களது உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து விடும். இவை ஒரு சிலது மட்டுமே இப்படி பல நூறு கதைகள் இருக்கையில். ஒரு அர்ப்பணிப்பாளர்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் எழுதுவது என்பது மிகவும் அபத்தமானது.இந்த படங்களை பாருங்கள் புரியும். அப்படத்தில் உள்ளது USA aid என்ற திட்டத்தின் மூலம் ஐநாவானால் பாடசாலை மாணவருக்கான உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க் கலன்களாகும். இது வன்னியில் மட்டுமல்ல யாழின் பட்டி தொட்டியெங்கும் இருந்த ஒன்று. ஆனால் இரும்பு வியாபாரிகளின் வருகையால் அருகி விட்ட நிலையில் தான் அதன் படம் எடுப்பதற்காக நேற்றும் இன்றும் நான் அலைய வேண்டிய தேவை வந்து விட்டது. செய்திக் கணக்குக்காக இணையத் தளங்களால் வெளியிடப்படும் செய்திகளால் காலப் போக்கில் வரலாறுகள் மாற்றப்படலாம். இதே செய்தி இன்னும் சில நாளில் அமெரிக்க வழங்கிய செறிவூட்டிய விட்டமின்களில் நஞ்சு கலந்திருந்தார்கள் எனவும் செய்தி வரலாம். இதை அத்தளத்துக்கு எடுத்துரைக்க பல முறை மினு்னஞ்சலில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை அதனால் தயவு செய்து இந்தச் செய்தி எத்தனை பேரிடம் போய்ச் சேர்ந்து தவறான எடுகோள் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை அதனால் இந்தச் செய்தி தவறானது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் பதிவையோ அல்லது இதில் கூறப்பட்டுள்ள செய்தியையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் ம.தி.சுதா நன்றி http://www.mathisutha.com/2012/05/blog-post_19.html

No comments:

Post a Comment