Tuesday, April 10, 2012

அணு உலையை எதிர்ப்பதா? இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்

கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்றும், எனவே சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இலங்கை, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளது. இது குறித்து இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா கூறுகையில், "அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் நாடுகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச அணுசக்தி ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது குறித்து இந்திய அரசுக்கு இலங்கை கடிதம் எழுதியது.இந்த கடிதத்திற்கு இந்தியாவும் பதிலளித்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து வருகிற செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அணுசக்தி ஆணையம் கூட்டத்தில் இலங்கை பிரச்னை எழுப்பும். மேலும், அணுமின் நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும். இதனால், தென்னிந்தியாவில் அணு உலை உள்ள பகுதிகளில் கதிர்வீச்சு பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் மூலம் இந்திய அணுமின் நிலையங்களில் ஏற்படும் கதிர்வீச்சு அதிகம் ஏற்பட்டால் எங்களுக்கு தெரியவரும்" என்றார். தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையம் ஆகியவை பற்றியே இலங்கை அரசு தற்போது பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையில் அணுமின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment