தேசிய தலைவர் நாமம் 3,000 ஆண்டுகள் நிலைக்கும்: சிங்களவர் கூற்று !

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட. தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment