Tuesday, April 10, 2012

ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில்கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம். வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம். உதடுகளில் வெடிப்பு அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். உதடுகள் மென்மையாக வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும். வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும். மென்மையான உதடுகள் வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும். முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும். பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.

இளம் பெண்களை விலை மாதுத்தொழில் ஈடுபடுத்திய பிரபல நடிகை கைது

சினிமாவில் நடிக்க ஆசை காட்டி இளம் பெண்களை விலை மாதுத்தொழிலில் ஈடுபடுத்தியதாக தெலுங்கு நடிகை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, லவ்டிக்கெட், பிரியசகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விலை மாதுத்தொழிலில் தள்ளியதாக பொலிஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸில் ஒரு பெண் தாரா சவுத்ரி மீது பரபரப்பான புகார் அளித்தார். அவர் கூறியதாவது, எனக்கு நடிகை தாரா சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை காட்டினார். அதை நம்பி சென்ற என்னை வலுக்கட்டாயமாக விலை மாதுத்தொழில் ஈடுபடுத்தினார். அவரிடம் இருந்து தப்பி வந்து இந்த புகாரை அளிக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து மடிக்கணிணிகள், ரகசிய கமெரா, டைரி, பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜ சேகரரெட்டியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், 21 சிம்கார்டுகள் போன்றவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அவரது டைரியில் அரசியல் பிரபலங்களின் போன் நம்பர்கள் இருந்தன. மேலும் ஒரு ஓடியோ கேசட்டில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு பேரம் பேசியது பதிவாகி இருந்தது. தாரா சவுத்ரியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியிருப்பது தெரிய வந்துள்ளது. சினிமா ஆசையில் வரும் பெண்களை மயக்கி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு இளம்பெண்களை விலை மாதுக்களாக ஈடுபடுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. தனது கைது குறித்து தாரா சவுத்ரி ஊடகங்களிடம் கூறியதாவது, தனக்கு சதி செய்து சிக்க வைத்து விட்டதாகவும் நிறைய நபர்களின் ஜாதகம் தன் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் அவர், வெளியே வந்ததும் பல ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

பிரேம்குமாரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: வீரவன்ச கோரிக்கை

மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அதனை யார் செய்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வழமை போன்று இந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் பாதுகாப்பு தரப்பை குற்றம் சுமத்துவது இலகுவானது. எனினும், இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் வேறும் தரப்பினர் இந்தச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் தப்பிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். அண்மையில் மட்டக்களப்பு நகரில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் இந்தக் கும்பல் இயங்கியுள்ளது. எனவே பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தல் சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல்களை அரசாங்கம் துரித கதியில் வெளியிட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

அணு உலையை எதிர்ப்பதா? இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்

கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்றும், எனவே சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இலங்கை, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளது. இது குறித்து இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா கூறுகையில், "அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் நாடுகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச அணுசக்தி ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது குறித்து இந்திய அரசுக்கு இலங்கை கடிதம் எழுதியது.இந்த கடிதத்திற்கு இந்தியாவும் பதிலளித்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து வருகிற செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அணுசக்தி ஆணையம் கூட்டத்தில் இலங்கை பிரச்னை எழுப்பும். மேலும், அணுமின் நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும். இதனால், தென்னிந்தியாவில் அணு உலை உள்ள பகுதிகளில் கதிர்வீச்சு பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் மூலம் இந்திய அணுமின் நிலையங்களில் ஏற்படும் கதிர்வீச்சு அதிகம் ஏற்பட்டால் எங்களுக்கு தெரியவரும்" என்றார். தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையம் ஆகியவை பற்றியே இலங்கை அரசு தற்போது பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையில் அணுமின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 9, 2012

தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்

தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்: youtube விடியோவில் என் கண்ணுக்கு தென்பட்ட இலங்கையில் புத்தளத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.fac...

விடுக்கக் கோருகிறது அவுஸ்திரேலியா! கண்டுபிடிக்கக் காரணத்தைக் கேட்கிறது இலங்கை!!

நன்கு திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய வெளியுறசு அமைச்சர் பொப் கார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தம் நாட்டுப் பிரஜையான குணரட்ணத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கருதும் நிலையில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால்தான் அவுஸ்திரேலிய செனட் சபையின் உறுப்பினர் என்ற வகையில் எமது வெளியுறவு அமைச்சரிடமும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரிடமும் நான் இதனை எடுத்துச் சென்றிருக்கிறேன்” என்று லீ ரெய்னன் கூறியுள்ளார். கடத்தப்பட்ட பிரேமகுமாரின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ணவை தான் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியதாகக் கூறியுள்ள செனட்டர் லீ, இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரேமகுமாரை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவே உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது குறித்து தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் லீ அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே பிரேம்குமார் குணரட்ணத்தை தாம் தேடிக் கண்டுபிடிப்பதாயின் அவர் எப்போது இலங்கை வந்தார் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதாக இலங்கை செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியான பெயருடன் எவரும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக அந்தச் செய்தி கூறியுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரெய்னன் அவர்களிடம் கேட்டபோது, ”இலங்கை அரசாங்கம் இப்படிக் கூறுவது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியுடன் இன்று பேசினேன். அவர் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார். அத்துடன்,தனது கணவர் இலங்கையில்தான் இருக்கிறார் என்பதிலும், ஏப்ரல் 6 ஆம் திகதி கடத்தப்பட்டார் என்பதிலும் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதனால், இந்த விடயத்தை மிகவும் உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன்” என்று செனட்டர் லீ ரெய்னன் கூறினார். அதேவேளை முன்னதாக பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ண அவர்கள், இது குறித்து ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது கணவரான பிரேம்குமார் குணரட்ணம் என்று அழைக்கப்படும் ரட்ணாயக்க முதியன்சலாகே தயாலால் கடத்தப்பட்டதாக தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதத்தில் தனது கணவரின் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே, இலங்கையில் மாற்று கருத்துக்கொண்டவர்கள் கடத்தப்படும் சூழ்நிலை தொடர்வதால், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்று கோரி அவுஸ்திரேலியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடந்துள்ளது. இதுவரை கடந்த இரு மாதங்களில் இலங்கையில் 29 பேர்வரை கடத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள செனட்டர் லீ ரெய்னன், தமது சொந்த அரசியல் கருத்துக்களுக்காக ஒரு அவுஸ்திரேலியப் பிரஜை இலங்கையில் ஆபத்துக்குள்ளாவது இது முதல் தடவை அல்ல என்றும் கூறியுள்ளார்.

தேசிய தலைவர் நாமம் 3,000 ஆண்டுகள் நிலைக்கும்: சிங்களவர் கூற்று !

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட. தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி தமன்னா!

மாவீரன்ல பட்டைய கிளப்புனாருல்ல ராம்சரண்.. ஆமா.. சிரஞ்சீவியோட புள்ள.. அவரு நடிச்சு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கிற படம் ரகளை.. அப்படின்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்..நாமும் எதிர்பார்ப்போடுதான் ரகளைய பார்க்கப் போனோம்.. தூங்கி எந்திரிச்சவுடனயே ஒரு ஃப்ரஷ்னஸ் இருக்கும்ல.. அப்படி ஒரு ஃப்ரஷ்னஸ் எப்பவும் இருக்கு ராம்சரண் முகத்துல.. ஆனா.. வீரதீர காட்சிகளிலும் கூட சோகம் அப்பியிருக்கிற மாதிரியே முகபாவனை காட்டுறாரு.. சுறுசுறுப்புலயோ ஆட்டபாட்டத்துலயோ அவரு குறை வைக்கல. யூத்துகளுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்பவும் ஸ்டைலிஷாகத்தான் படம் முழுக்க வர்றாரு.. சண்டைக் காட்சிகள்லயும் தூள் கிளப்புறாரு. தமன்னாவோட இயல்பான அழகை ஒரே ஒரு அருவிக் குளியல் காட்சியில மட்டும்தான் பார்க்க முடியுது.. மத்தபடி படம் முழுக்க ஒப்பனை முகம்தான். ஒரு பாடல் காட்சியில இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி வர்றாரு.. இடுப்பை மட்டுமல்ல உடம்பயும் வில்லா வளைச்சு அந்த ஆட்டம் போடறாரு. நம்ம பார்த்திபன், நாசர், அஜ்மல்ன்னு இவங்களும் வந்து போறாங்க. வில்லன் கோட்டா சீனிவாசராவின் பாத்திரமும் கூட பேசும் அளவுக்கு இல்லை. இதுக்கு மேல பாலிவுட் வில்லன்கள் அஞ்சு பேரு வேற எப்பப் பார்த்தாலும் உறுமிக்கிட்டே இருக்காங்க. மணிசர்மா மியூசிக் போட்ருக்காரு.. ஒண்ணு ரெண்டு பாடல் ஓ.கே.. மத்தபடி பெரிசா சொல்லிக்கிர்ற மாதிரி இல்ல.. சமீரோட கேமராவுக்கு நல்ல தீனி.. இங்கே பொள்ளாச்சி, ஹைதராபாத், கோவான்னு ஆரம்பிச்சு.. பாங்காக், சுவிட்சர்லாந்து, மலேசியா, சீனாவுல உள்ள மூங்கில்காடு வரைக்கும் காட்சிகளை அள்ளிக் கொண்டு வந்து திரையில கொட்டியிருக்கு.
பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வந்தே ஆகணும். அதுவும் ஸ்பீட் டான்ஸா இருந்தாகணும்கிறதுல இருந்து இந்தத் தெலுங்கு சினிமாக்காரங்க மாறவே மாட்டாங்க போல. ரகளையும் அந்த ரகம்தான். தெலுங்குலயும், தமிழ்லயும் எடுத்தாலும் தெலுங்கு நெடியே தூக்கலா இருக்கு. மாவீரன் பாப்புலாரிட்டிய வச்சே படத்த ஓட்டிடலாம்கிற நம்பிக்கையில 40 கோடிய இரைச்சிருக்காராம் சவுத்ரி. இந்தியாவுல எந்தப் படத்துக்கும் இந்த அளவுக்கு வால் போஸ்டர் அடிச்சதில்லையாம்.. முதல் கட்டவால் போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் காட்டினா போதுமா? மனசுல ஒட்டணுமே..? எப்படி எடுத்தாலும் மசாலா படம் ஓடும்கிற நம்பிக்கை ரொம்பவே இருக்கும் போல இந்த ரகளை யூனிட்டுக்கு.
சின்ன வயசுல பிரிஞ்சு வளர்ந்த பிறகு ஒண்ணு சேர்ற கதாபாத்திரங்கள்.. உச் கொட்ட வைக்கணும்னு வலிய திணிக்கிற ஃப்ளாஷ் பேக்.. தெலுங்கு சினிமாக்களில் இடம் பெறும் காளி கோயில்ன்னு வழக்கமான எல்லா சங்கதிகளும் இதிலும் உண்டு. ஆமா.. கதை.. திரைக்கதை..? எந்தப் பக்கமும் இழுக்க முடிகிற ஒரு ரப்பர் கதையை வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் இழுத்திருக்கிறார்கள். இயக்குனர் சம்பத்தாம்.. டைரக்டர் சார்.. அடுத்தாச்சும் உருப்படியா யோசிச்சு ஒரு நல்ல படம் பண்ணுங்க.. படம் முடிஞ்சு வெளிய வர்றப்ப, இதே மாதிரி மசாலா படங்கள எத்தனையோ தடவ பார்த்தாச்சேங்கிற சலிப்பும் சேர்ந்து வருது. ரணவேதனை என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது என்றாலும்.. ரகளை ஏனோ களை கட்டவில்லை.!

எப்படி இருந்த மனிஷா கொய்ரால இப்புடி ஆயுட்டுதே..கண்ணை கட்டும் புகைப்படம்

சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நாயகி மனிஷா கொய்ரால திருமண வாழ்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளினால் காணமல் போயிருந்தார்..மிக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது..முன்னால் கனவுக்கன்னி இந்தநாள் ????

அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக நயன்தாரா

ராமனின் மனைவி சீதையாக நடித்த நயன்தாரா, தற்போது பஞ்ப பாண்டவர்களின் மனைவி திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயன்தாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே பலரின் எதிர்ப்புக்கு காரணம். இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயன்தாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத் தான் செம வரவேற்பு. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன பாலகிருஷ்ணா மறுபடியும் நயன்தாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயன்தாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த நடிகை செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா. தற்போது நயன்தாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது. படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயன்தாரா சரி என்று சொன்னதும், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

தமிழ்நாட்டில் புலிகளுக்குச் சிறப்புப் பயிற்சி! மறுக்கிறது இந்தியத் தூதரகம்!!

பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாகத் தெரிவிக்கப்படுவதை இந்தியத் தூதரகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் சிறப்புப் பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. இந் நிலையிலேயே மேற்படி தூதரம் மறுப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விடுதலைப்புலிகள் இலங்கையின் உறுதித்தன்மையை பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் என்றும் இத்தகைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக நேற்றைய தினம் ஆங்கில ஊடகமான தி ஐலன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தியத் தூதரகம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. இது குறித்து இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இன்றைய தி ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்த புலிகள் இலங்கையின் உறுதித் தன்மையைப் பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் இலங்கைப் புலனாய்வு அறிக்கை மூவர் கைது ஏனையோர் தலைமறைவு எனத் தலைப்பிடப்பட்ட செய்தி எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் இரகசிய முகாம்களில் பயங்கரவாதிகள் பயற்சியளிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய கருத்து முற்று முழுதாகத் தவறானதும் அடிப்படையற்றதுமாகும். இது சம்பந்தமாக இரு நாட்டினது பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதுடன் இத்தகையவொரு தகவல் அவர்களால் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலையில் கடந்த வாரம் ஈ.பி.டி.பி. உறுப்பினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரொருவர் இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதாகவும் இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருகோணமலை அன்புவழிபுரம், அநுராதபுரம் ந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை நேற்றும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெருக்குகிறது ஐ.நா.! மூச்சுத் திணறுகிறது இலங்கை!!

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நாவின் பங்கு பணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத் தகவலை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வி ஒன்றில், நம்பகமான வட்டாரங்கள் மூலம் தமக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவரை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் ஏற்கனவே நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனிதஉரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராயும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் தாமரா குணநாயகம் கூறியுள்ளார். அத்துடன், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தமாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா அதிகாரிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்பாக இந்த அறிக்கையில் சிறிலங்கா மீது குறை கூறப்படும் சாத்தியம் உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Friday, April 6, 2012

சன் சீ கப்பலில் அகதிகளை சட்டவிரோதமாக அனுப்பியவரை கனடா உறுதி செய்தது

‘சன் சீ‘ கப்பலில் 492 தமிழர்களை அகதிகளாக கனடாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தாக, பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரே குற்றவாளி என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தயாகரன் மார்க்கண்டு என்பவரே கனடாவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இவர் அண்மையில் பிரான்சில் நடத்தப்தப்பட்ட தேடுதல் ஒன்றின் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக கனேடிய சமஸ்டி காவல்துறை, கடந்தமாதம் அனைத்துலக பிடியாணையை பிறப்பித்துள்ளது. தயாகரன் மார்க்கண்டு தற்போது பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை கனடாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் விக் ரொவ்ஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் ஜாசென் கென்னி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விசாரணைக்குப் பயந்து லண்டனில் இருந்து தப்பியோட்டம்

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றம் இழைத்த இவர் மீது பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது. போர்க்குற்றங்களுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, லண்டனின் குடும்பத்தினருடன் தங்கியுள்ள போதும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கிக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது. அத்துடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்று ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈஸ்டர் காலம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இரண்டு வாரங்களாகும் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பிரித்தானியாவில் தாம் விசாரிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார். இதுகுறித்து அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் 18 மாதகால பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கமான மாற்றத்துக்கும் உலகத் தமிழர் பேரவையின் சட்டநடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பழிக்கு பழி வாங்கும் இலங்கை..! எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏற்பாடு!

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. சிறிய ரக வாகனங்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்தியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை. இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ”மாருதி” வாகனம், ”டாட்டா நெனோ” மோட்டார் வாகனம் ஆகியவற்றின் விலை 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் தற்போது 16 முதல் 17 லட்சம் ரூபா வரையில் விற்பனையாகிறது. இதனைத்தவிர முச்சக்கர வண்டியொன்றின் விலை ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 80 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விசேட அம்சம் என்னவெனில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் வரி அதிகரிக்கப்படவில்லை. இதில் மற்றுமொரு கட்டமாக இந்திய ஒயில் நிறுவனத்திற்கு (IOC) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கோரப்பட்டுள்ளன. எண்ணெய்வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்து கருத்துதெரிவிக்கும்போது, இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான அதிகாரம் இலங்கை எண்ணெய்வளத்துறை நிறுவனத்திற்கு இல்லை எனவும் இதற்கான அதிகாரம் திறைசேரியிடமே இருப்பதாகவும் கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில், ஏப்ரல் 08ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை புதுடில்லியில் ‘South Asian Political Research Institute – SAPRI’ என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு முடிவடைந்த பின்னர் மகிந்த அரசாங்கத்தின் இந்தியா மீதான பழிதீர்க்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தாக்கல் செய்யுமாறும் மகிந்த ராஜபக்‌ஷ அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.