Friday, February 3, 2012

நான் கொண்டு வந்த 2 கிலோ தங்கமும் என்னுடையது மாத்திரமல்ல. சூசையின் மனைவி!!

புலிகளின் கடற்படைத்தளபதியாக இருந்த சூசை எனப்படுகின்ற தில்லையம்பலம் சிவநேசனின் மனைவி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டு கொழும்பு புறநகர்ப்பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் அவர் அண்மையில் நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் சாமர லக்ஷ்மன் குமார என்பவருக்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ தங்கம் தொடர்பாக கேட்டபோது, அது தன்னுடையது மாத்திரம் அல்ல எனவும், பிற புலித்தளபதிகளது மனைவிமாரினதும் எனத் தெரிவித்துள்ளார். பேட்டியின் முழுவிபரம். கேள்வி: உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள் என்று எங்களுக்குச் சொல்வீhகளா? பதில்: சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய எனது அண்ணனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. நான் அவரை விரும்பத் தொடங்கினேன். அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப் படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன மற்றும் நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்,மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார். கேள்வி: நீங்கள் அப்போது எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா? பதில்: இல்லை கேள்வி: சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா? பதில்: அதன் பிறகும் மாறவில்லை. கேள்வி: ஏன்? பதில்: அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. கேள்வி: சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் விவாதிப்பாரா? பதில்: அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப்பற்றியே பேசுவோம். கேள்வி: அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி விவாதிப்பார்? பதில்: அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்டுக்கு வருவது பிரதானமாகவும் உறங்குவதற்கு வேண்டியே. கேள்வி: உங்கள் வீடு எங்கே உள்ளது? பதில்: ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம்,ஆனால் இராணுவத்தினர் ‘ஒப்பறேசன் ரிவிரச’ நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம், முல்லைவெளி, வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம். கேள்வி: சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும்,தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா? பதில்: அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது, எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்திருந்தார். அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது. அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, ஆனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார். கேள்வி: 2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவரின் அந்த பயணத்தைப்பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா? பதில்: இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் தீவிர சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியது. கேள்வி: சிங்கப்ப+ருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது? பதில்: அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரண்டு தரம் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினர்ர். கேள்வி:பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது. பதில்: சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்பிக்கை வைத்திருந்தார், மற்றும் அதேபோல பிரபாகரனும் சூசைமீது உயர்வான நம்பிக்கையை வைத்திருந்தார். கேள்வி: உங்களது குடும்பம் பிரபாகரனின் குடும்பத்தினரோடு எந்த வகையான உறவினைக் கொண்டிருந்தது? பதில்: எங்களது குழந்தைகள் பிறந்த நேரத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் வருகை தந்தனர், அதைத்தவிர வேறு வருகைகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் புலிகளின் விழாக்களிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம். அப்போது நாங்கள் எங்களுக்கு அக்கறையுள்ள பல விடயங்களையும் பற்றிப் பேசிக் கொள்வோம். பிரபாகரன் மற்றும் மதிவதனி ஆகிய இருவருமே எப்படி எங்களின் குழந்தைகளின் படிப்பு விடயங்கள் முன்னேற்றகரமாக உள்ளனவா என வழக்கமாக எங்களிடம் விசாரிப்பதுண்டு. கேள்வி: உங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வந்தபோது நீங்கள் அச்சமடையத் தொடங்கினீர்களா? பதில்: ஏன் இல்லை. யார்தான் அச்சப்பட மாட்டார்கள்? கேள்வி: அப்போதுகூட எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுமாறு அவரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பதில்: நான் அவரிடம் கேட்டிருந்தால்கூட அவர் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். தனது சாவு, தான் எல்.ரீ.ரீ.ஈக்காக பணியாற்றும்போது வரக்கூடுமே தவிர வேறு வழியினால் அல்ல என்று அவர் வழக்கமாகச் சொல்வதுண்டு. கேள்வி: 2007ம் ஆண்டு உங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக இருந்தது அல்லவா, உங்கள் மகன் சங்கர் இறந்தது மற்றும் சூசை கூட மிகவும் மோசமான காயங்களுக்கு உள்ளானது போன்றவற்றால்? பதில்: எனக்கு அந்த திகதி நினைவில் உள்ளது. அது ஜூலை 18ந்திகதி. கிளிநொச்சியில் நடக்கும் ஒரு விழாவுக்காக நான் வாகனமொன்றில் செல்ல இருந்தேன். எங்களது இளையமகன் வாகனங்களில் பயணம் செய்வதில் அளவுகடந்த ஆசை உள்ளவனாக இருந்தான், அதேபோலவே அவன் கடலையும் விரும்பினான். ஆனால் சூசை ஒருபோதும் எங்களது மகனை கடலுக்கு கூட்டிப்போனது கிடையாது. அவர் அவரது மகனை கரையில் உள்ள படகு ஒன்றில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் ஆழ்கடலுக்குச் செல்வார். சங்கர் படகிலிருந்து மற்றவர்களுடன் விளையாடுவான். இது நடந்த தினத்திலும் கூட இதையேதான் சூசை செய்தார், ஆனால் எப்படியோ அல்லது வேறுவிதமாகவோ அவர் தனது ஆட்களிடம் எனது மகன் இருந்த படகினையும் ஆழ்கடலுக்கு கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். அந்நேரத்தில் படகுகள் சில பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ படகுகளில் ஒன்று ,சூசையின் படகுடனும் மற்றும் எனது மகன் இருந்த படகுடனும் மோதியது. இந்த விபத்தில் நான் எனது மகனைப் பறிகொடுத்தேன். கேள்வி: அது திட்டமிட்ட ஒரு விபத்து என்று நாங்கள் கேள்விப் பட்டோம்? பதில்: அப்படி ஒரு வதந்தி நிலவியது, ஆனால் அது ஒரு விபத்து என்றே நான் நம்புகிறேன். கேள்வி::அந்த விபத்தில் சூசைக்கு என்ன நடந்தது? பதில்: அவரது வயிற்றில் மிக நீளமாக கிழிக்கப்பட்டிருந்த காயம் இருந்தபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, மற்றும் அது நடந்தபின் மூன்று வாரங்களாக அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். கேள்வி:: பொட்டு அம்மான் அந்த படகு விபத்தை ஏற்பாடு செய்ததாக வதந்தி பரவியது, அதுகுறித்து எல்.ரீ.ரீ.ஈ கடும் மௌனம் சாதித்ததால் அந்த வதந்தி உண்மையோ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது? பதில்:: ஆனால் அவர் அந்த விபத்தை ஏற்பாடு செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை. கேள்வி:: பொட்டு அம்மான் அந்த விபத்து நடந்ததுக்குப் பிறகு உங்களுடன் பேசினாரா? பதில்: ஆம் அவர் என்னுடன் பேசினார். பொட்டு அம்மான் மட்டுமல்ல மற்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் என்னுடன் பேசினார்கள். எல்லா எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் எனது மகனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டார்கள். கேள்வி:: காயங்கள் சுகமடைந்த பின்பு அந்த விபத்தைப்பற்றி சூசை ஏதாவது சொன்னாரா? பதில்:எமது மகனின் மறைவினால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்திருந்தார். அது அவருடன் நீண்டகாலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் அவரிடம் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருக்கும்படியும் ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் எனது அறிவுரைகளைக் கேட்கவில்லை. கேள்வி:: நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதுவித உதவியும் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறதே. நீங்கள் வீட்டிலிருந்து என்ன செய்வீர்கள்? பதில்:நான் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதுடன் வீட்டில் அவர்கள் தேவைகளையும் பார்த்துக் கொள்வேன். எங்கள் தேவைகளுக்கு வேண்டிய உணவுப் பயிர்களை நானே பயிர் செய்து கொள்வேன். எனது குழந்தைகளுடன் தொலைக்காட்சி பார்ப்பதில் இணைந்து கொள்வேன். கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவிகளை வழங்காத போதிலும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் குடும்பங்களுக்கு வாகனங்களையும் பாதுகாப்பினையும் வழங்கியிருந்ததே? பதில்: எங்களுக்கு ஒரு வானும் மற்றும் சாரதியுடன் கூடிய ஒரு முச்சக்கர வண்டியும் மற்றும் ஒரு பாதுகாப்பு கடமையாளரும் வழங்கப்பட்டிருந்தன. கேள்வி:: வடக்குக்கு வெளியே கொழும்பை போன்ற இடங்களில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்கிற தகவல்களை அறியக்கூடிய வழிகள் உங்களுக்கு இருந்தனவா? பதில்: நாங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து அப்படியான விடயங்களை அறிந்து கொள்வோம். சிலவேளைகளில் சூசை வீட்டுக்கு வரும்போது தெற்கில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்றை வழக்கமாகக் கொண்டு வருவார். கேள்வி:: யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? பதில்: ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அச்சத்துடன்தான் வாழ்ந்து வந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறினால் எந்த வித மாற்றமுமில்லாமல் காயமடைவோம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். விடயம் அத்தகைய மோசமான நிலைக்கு வந்துவிட்டது. கேள்வி:: இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கிரிக்கட் போட்டிகள் நடந்த போது யாருக்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்கள்? பதில்: நாங்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்கினோம். நாங்கள் சச்சின் டெண்டுல்கரை மிகவும் விரும்பினோம். கேள்வி:: முரளீதரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: முரளீதரனையும் நாங்கள் விரும்பினோம் ஆனால் டெண்டுல்கரை அதைவிட அதிகம் விரும்பினோம். கேள்வி:: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நீங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற விரும்பினீர்கள். ஏன்? பதில்: நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பியது, மே 12ல். அந்த நேரத்தில் அதிக அளவிலான மக்கள் ஒரு சிறு பகுதி நிலப்பரப்பினுள் அடைபட்டுக் கிடந்தார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு அது தெளிவான சான்றாக அப்போது தோன்றியது. நாங்கள் எங்கள் மகள் சிந்துமணியையும் மற்றும் மகன் கடலரசனையும் சூசையின் மூத்த சகோதரனின் மனைவி மற்றும் பிள்ளையுடன் ஒரு படகில் அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் நான் மற்றவர்களை விட்டுச் செல்ல முடிவெடுக்கவில்லை, ஏனெனில் சூசை அப்படிச் செய்வதை விரும்பவில்லை. ஆனால் இறுதியாக நான் எனது பிள்ளைகளுடன் செல்வது என முடிவெடுத்தேன். சூசை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை தான் போராடப்போவதாக தெரிவித்த சூசை பின்னர் வெளியேறுவதற்காக எங்களுக்கு ஒரு படகினை வழங்கச் சம்மதித்தார். கேள்வி:: அந்தப் படகிலேறி எங்கே செல்ல விரும்பினீர்கள்? பதில்: எங்களுக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று முடியுமானால் இந்தியாவுக்கு தப்பிச் செல்வது ஆனால் இதன்போது நாங்கள் ஆழ்கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல்களை எதிர்கொள்ள நேரிடும். கடற்படையினரிடம் பிடிபடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அனால் எங்கள் எண்ணமெல்லாம் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிலேயே இருந்தது. நாங்கள் மே 12ந்திகதி வெளியேற தீர்மானித்தாலும் உக்கிரமடைந்த யுத்த நிலமை எங்களை பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருக்க வைத்தது. எனவே கடைசியாக நாங்கள் மே 14ந் திகதியே வெளியேறினோம். கேள்வி: மே 12ந்திகதி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நீங்கள் புதுக்குடியிருப்பில் வைத்து காணவில்லையா? பதில்: ஆம் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள், நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் வரை அவர்கள் அங்கே பத்திரமாக இருந்தார்கள். கேள்வி:: அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் பேசினீர்களா? பதில்: நான் அவர்களுடன் பேசவில்லை, ஆனால் சிலவேளைகளில் நாங்கள் வெளியேறுவதைப்பற்றி சூசை அவர்களிடம் சொல்லியிருக்கலாம். கேள்வி:: பிரபாகரன் அடைபட்டுக் கிடந்த மக்களுடன் இருந்தாரா அல்லது அவர்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு இருந்தாரா? பதில்: அந்த இறுதிக்கட்டத்தின்போது அவர்களுக்காக எந்த ஒரு தனியான இடமும் இருந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கேள்வி:: அவரை விட்டுப் பிரியும் முன்பு சூசை என்ன சொன்னார்? பதில்: நான் கடைசியாக அவரைப் பார்த்தது, மே 12ல். ஆனால் மே 14ல் நாங்கள் அந்த இடத்தை வெளியேறும்போது நான் அவரைக் காணவில்லை. நாங்கள் அன்றுதான் வெளியேறுகிறோம் என்பதை அவர் அறியவில்லை, எங்களுக்கென்று தனியான பதுங்கு குழிகள் எதுவும் இருக்கவில்லை அதனால் நாங்கள் மற்றவர்களுடன் ஒரு பதுங்கு குழியினைப் பகிர்ந்து கொண்டோம். கேள்வி: நீங்கள் வெளியேறுவதற்கு முன்னதாக சூசை எங்கேயிருக்கிறார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்யவில்லையா? பதில்: நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் அதைச் செய்ய முடியவில்லை. யுத்தமானது அநேகமாக ஒரு கைப்பிடியினுள் அடங்கும் நிலையை எட்டியிருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரிடம் ,நாங்கள் வெளியேறுவதை சூசையிடம் தெரிவிக்கும்படி சொன்னோம். இரவு 9 மணியளவில் புறப்பட்டோம். நாங்கள் 12 பேர்கள் அந்தப் படகில் இருந்தோம் ஆனால் படகு தாக்கப்படும்வரை எங்களால் சுமார் 4 நிமிடம் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது. கேள்வி:: பின்னர் என்ன நடந்தது? பதில்: அதை இயக்கிக் கொண்டிருந்த நபரை அவர்கள் தாக்கியபோது அவர் குண்டடிபட்டு படகினுள் விழுந்தார். படகின் பல இடங்களிலும் துவாரம் ஏற்பட்டு அதனுள்ள நீர் வர ஆரம்பித்தது. நாங்கள் நீரை வெளயேற்றிக் கொண்டிருந்தபோது சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய கடற்படைப்படகு எங்களை அணுகியது. சிலர் கொட்டியா கொட்டியா எனச் சத்தமிடுவதை நான் கேட்டேன் மற்றும் அவர்கள் எங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ என நாங்கள் அஞ்சினோம். அந்த நிமிடத்தில் ஒரு பெரிய படகு உறுதியான வெளிச்சத்தை பாய்ச்சியபடி எங்களை நோக்கி வந்தது. சூசையின் சகோதரரின் மனைவி றூபனின் கைக்குழந்தையை உயர்த்திக் காட்டினார். சிறிய படகில் இருந்த மனிதர்கள் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் தமிழில் பேசினார்கள். “பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்;” என அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் எங்களை அவர்களது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தார்கள். கேள்வி:: நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா? பதில்: உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளை களையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன.; எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன். கேள்வி:: கடற்படையினர் சூசையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கவில்லையா? பதில்: எனக்கு சூசையின் தொலைபேசி இலக்கம் தெரியுமா என அவர்கள் என்னிடம் வினவியபோது எனக்குத் தெரியாது என அவர்களிடம் நான் கூறினேன். ஆனால் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன். கேள்வி:: சூசை ஒரு தொலைபேசியை பயன படுத்தியதில்லை என்றா சொல்ல வருகிறீர்கள். பதில்: அவர் ஒன்றைப் பயன்படுத்தி வந்தார் ஆனால் மே 12ந்திகதி கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது அவரிடம் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. கேள்வி:: மே 12ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில தோற்கடிக்கப்படும் என்பதை, சூசை அறிந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? பதில்: யுத்தத்தில் நாங்கள் வெல்வோமா அல்லது தோற்போமா என்பதை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு குறுகிய நேரச் சந்திப்பு. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எங்களை அவரிடம் கூட்டிச் சென்றபோது நாங்கள் அங்கே நிற்கிறோம் என்பதைக் காணமட்டுமே அவரால் முடிந்தது. அந்தச்சமயத்தில் இராணுவத்தினர் வெகு சமீபத்தில் வந்து விட்டதால் வெகுநேரம் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை. கேள்வி:: கடற்படையினர் உங்களை அடையாளம் கண்டு கொண்டபின் என்ன நடந்தது? பதில்: எங்களை அவர்களது முகாமுக்கு கொண்டு சென்றார்கள். எங்கள் படகில் துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதால் படகினை இலகுவானதாக்க நாங்கள் எங்கள் பொதிகள் யாவற்றையும் தூக்கி எறிந்து விட்டோம் மற்றும் நாங்கள் அப்போது உடுத்திருந்த உடைகள் ம்ட்டுமே எங்களிடம் இருந்தது. கடற்படையினர் எங்களுக்கு உடைகளை வழங்கினார்ர்கள். கேள்வி:: உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன? பதில்: நாங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதும், எனது பிள்ளைகளும் நானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப் படுவோமோ என எண்ணி நான் ஆழமாக அச்சமடைந்திருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் நலமாகவே உள்ளோம். கேள்வி:: நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று கூறுவதால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில்: அது இப்படித்தான். நாங்கள் எங்களுக்கு உரியது என் நம்புவதிலும் அதிகம் வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பிள்ளைகள் பாடசாலை மற்றும் பூங்கா என்பனவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நானும் அவர்களுக்கு துணையாகச் செல்கிறேன். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப் படவதில்லை என்பதை எண்ணும்போதுதான் நான் துக்கப்படுகிறேன். கேள்வி:: உங்கள் உறவினர்கள் உங்களுடன் பேசினார்களா? பதில்: என்னுடைய சகோதரரும் தந்தையும் லண்டனில் வசிக்கிறார்கள். தொலைபேசி மூலம் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். அவர்கள் ஒருமுறை என்னைக் காண வந்திருந்தார்கள். கேள்வி:: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? பதில்: எனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டால் அதுவே எனக்குப் போதும் மற்றும் அவர்கள் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் வழங்கப்பட வேண்டும். கேள்வி:: உங்கள் தினசரி வாழ்க்கைமுறை என்ன? பதில்: நான் காலை 4.30 மணிக்கு எழுந்து எனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறேன் அதன் பின்னர் நான் துவைத்தல், வீட்டுச் சாமான்களை அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். வெளியே கோவில் மற்றும் பூங்கா என்பனவற்றுக்கச் செல்கிறேன் இரவில் வேலை ஏதுமின்றி இருந்தால் தொலைக்காட்சிகளை ரசிப்பேன். கேள்வி:: மிக முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். நீங்கள் கடற்படையின் படகுகளால் வழி மறிக்கப்பட்டபோது உங்களிடம் 2 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூபா 600,000 பணம் என்பன உங்களிடம் இருந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தளவுக்கு தங்கமும் பணமும் ஏன் கொண்டு சென்றீர்கள? பதில்: என்னிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை, ஆனால் என்னுடையது 200,000ரூபா. மற்றும் றூபுனின் மனைவியுடையது 200,000ரூபா. எங்களோடிருந்த மற்றொருவருடைய பணம் 175,000ரூபா என்பனவே மொத்தப்பணமும். எல்லா தங்க நகைகளும் என்னுடையதல்ல, ஆனால் எங்கள் மூவருக்கும் சொந்தமானது. என்னுடைய தங்க நகைகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பலராலும் பரிசுகளாக வழங்கப்பட்டவைகளாகும். கேள்வி:: உங்களைச் சுற்றி யுத்த அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இவ்வளவு தங்கத்தையும் எப்படி உங்களால் வைத்துச் சமாளிக்க முடிந்தது மற்றும் தப்பி ஓடும்போது ஏன் அவற்றைக் கொண்டு சென்றீர்கள்? பதில் : நான் தங்கங்கள் யாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நாங்கள் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வேன், எனதுபிள்ளைகளுடையதும் மற்றும் என்னுடையதும் எதிர்காலத்துக்கு பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்.

ஹிலாரியால் கலங்கிய இலங்கை! ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டிலேயே சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சர்ச்சைக்குரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே வெளியாகி விட்டது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகமே அறியும். இந்தநிலையில் இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரத்தைக் கையாளும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர், ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனிவாவில் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தனர். அதற்கு முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவித்திருப்பது சிறிலங்காவைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கும் நிலை உருவாகி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

சிம்புவை மட்டும் கிட்ட சேர்த்துராதீங்க. அப்புறம் உங்க எதிர்காலமே கோவிந்தாதான்!!

டங்க் ஸ்லிப்பாகுற நேரத்தில் கூட சிம்புவை பற்றி நல்ல வார்த்தை நாலு வராது என்கிறளவுக்கு எஸ்டிஆரின் கேரக்டரை குதறி வைக்கிறது கோடம்பாக்கம். அதுவும் அவருடன் நடிக்க யார் ஒப்பந்தம் ஆனாலும், அந்த தம்பி கூடவாம்மா நடிக்கிறே? பண்டம் பாத்திரமெல்லாம் பத்திரம் என்கிற அளவுக்கு மிரட்டி வைக்கிறார்கள். விக்ரமுடன் ராஜபாட்டையில் ஜோடி சேர்ந்த தீக்ஷா சேத்துக்கும் அப்படி ஒரு அனுபவம் கிட்டியது. நடிக்க வந்த நாலே நாளில் இவரை சந்தித்த ஒரு மேனேஜர், யாருக்கு வேணும்னாலும் கால்ஷீட் கொடுங்க. ஆனால் அந்த சிம்புவை மட்டும் கிட்ட சேர்த்துராதீங்க. அப்புறம் உங்க எதிர்காலமே கோவிந்தாதான் என்று போட்டுக் கொடுக்க, அட போப்பா. நான் அவரோட ரசிகை தெரியுமா என்றாராம் தீக்ஷா சேத். யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். சிம்பு என்னிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த வினாடியே கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாக சொன்ன செய்தி காற்று வாக்கில் சிம்புவின் காதுகளுக்கும் போனது. விளைவு? தன்னுடைய வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாதான் வேண்டும் என்று அடம் பிடித்து கமிட் பண்ணினாராம். சந்திக்கிறதுக்கு முன்னாடியே டமாரத்தை ஒலிக்க விடுறாங்களே.

இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட ஹாட் படம் !!

இந்தியில் தயாரான சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம், திருட்டு டிவிடி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி யில் தயாரான படம் ‘தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். ஏற்கனவே சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்கவில்லை. இப்படத்துக்கு பிறகு பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். படம் வெளியான 2 மாதத்தில் இதன் ஒரிஜினல் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. இது பற்றி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, ‘‘இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட படம் Ôடர்ட்டி பிக்சர்Õதான். இவ்வளவு விரைவாக படத்தின் ஒரிஜினல் டிவிடி வெளியிட்டது பற்றி கேட்கிறார்கள்.அப்படி செய்யாவிட்டால் இதன் திருட்டு டிவிடி விற்பனை, பட ரிலீஸில் கிடைத்த வசூலையே தாண்டிவிடும். எனவேதான் உடனடியாக டிவிடி வெளியிடப்படுகிறது’ என்றார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘நல்ல படங்களை கொடுக்கும் எண்ணத்துடன்தான் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஓடவில்லை. எதுவும் நம் கையில் இல்லை என்பதை தி டர்ட்டி பிக்சர்Õ வெற்றி எடுத்துக்காட்டி இருக்கிறது. இப்படம் 2 மாதத்தில் ரீ ரிலீஸ் செய்தபோது மறுபடியும் ஒரு வசூல் சாதனை நிகழ்த்தியது. டிவிடியும் சாதனை புரியும். சில்க் வேடத்தில் நடித்ததற்காக எனக்கு அதிகபட்சமாக விருதுகள் கிடைத்தது என்றார்.

இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல !!

சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும்? இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம். நிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய். சட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம். டைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு? அதுதான்ங்க புரிய மாட்டேங்குது!

பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன். பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது. இந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன். -இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர். ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார். இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை. ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்? இன்னமும் புரியாத புதிர்தான்.-

Wednesday, February 1, 2012

எனக்கு ஜோடி சந்தானம்னும் எழுதிக்கோங்க!!

கண்ணா லட்டு திங்க ஆசையா என்று சிறுத்தையில் சிரிக்க வைத்த கார்த்தி, தனது பேவரைட் காமெடியன் சந்தானத்தையும் சேர்த்துக் கொண்டு சிரிக்க வைக்கப் போகும் படம்தான் சகுனி. இந்த படத்தில் எனக்கு ஜோடி ப்ரணிதான்னுதானே எழுதுவீங்க. அப்படியே எனக்கு ஜோடி சந்தானம்னும் எழுதிக்கோங்க என்கிறார் கார்த்தி. ஏனென்றால் படம் முழுக்க கார்த்தியும் சந்தானமும் லூட்டி அடித்திருக்கிறார்களாம். அரசியல் காமெடி வித் சட்டையர் பிலிம் என்றால் சட்டென்று மனதிற்கு வருகிற படம் அமைதிப்படைதான். இத்தனை காலம் கழித்து அத்தனை பரிபூரணமாக வரப்போகிற இன்னொரு படம் இந்த சகுனி என்கிற கார்த்தி, தமிழ்சினிமாவில் தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பஞ்சம். டப்பிங் மட்டும் இல்லாமல் அவர்களையே பேச விட்டு அந்த படங்களை பார்க்கிற பாக்கியத்தை ரசிகர்களுக்கு அளித்தால், காமெடி சேனல்கள் அத்தனையம் ஒரே நாளில் அழியக்கூடிய ஆபத்து ஏற்படும். நேற்று வரை அப்படிதான் இருந்தது கார்த்தியுடன் நடித்த கதாநாயகிகளின் அருமையும் பெருமையும். நல்லவேளையாக இப்படத்தில் நடிக்கும் ப்ரணிதா தமிழில் தாரை தப்பட்டையே வாசிக்கிறாராம். சொல்றதை தமிழ்லேயே புரிஞ்சுகிட்டு நடிக்கிறார். அதுவே பெரிய சந்தோஷம்தானே என்கிறார் கார்த்தி.

நண்பன் போன்ற ரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன்!!

''ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன்'' இயக்குநர் ஷங்கர் கூ‌றியு‌ள்ளா‌ர். என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை எ‌ன்று ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ள ஷ‌ங்க‌ர், இதனால் பெரும் நஷ்டமடைந்தேன் எ‌ன்றா‌ர். படம் தயாரித்து நானே என்னுடைய கையை சுட்டுக் கொண்டேன் எ‌ன்று‌ம் அதில் இருந்து சிறிதுசிறிதாக மீண்டு வருகிறேன் எ‌ன்று‌ம் ஷ‌ங்க‌ர் கூ‌றினா‌ர். தற்போது நான் இயக்கிய நண்பன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எ‌ன்று‌ம் இது இந்திப் படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். ந‌ண்ப‌ன் பட‌த்‌தி‌ல் விஜய் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தார் எ‌ன்று கூ‌றிய ஷ‌ங்க‌ர், ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்றார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.