Sunday, January 1, 2012

ஈழப்போரின் வீரப்பதிவு “தேன்கூடு”

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன் முறைய ஈழ மக்களின் வாழ்க்கை, துயரம், போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு “தேன் கூடு” திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது. “தேன் கூடு” திரைப்படத்தின் திரை முன்னோட்டம் 2012 புத்தாண்டு தினத்தில் இன்று இணையத்தில் வெளியிடப்படுகின்றது. தமிழீழ மக்களின் வாழ்வியலையும், போராட்ட வாழ்க்கையையும், தாங்கி வருவதோடு மட்டுமின்றி எதிர்கால ஈழவிடுதலையின் நம்பிக்கைக் கருவாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம், ஓர் கலை ஆயுதமாகவும், அடுத்துக்கட்ட நகர்வுக்கு ஓர் ஒளியாகவும் இருக்கும் என்று திரைப்படக்குழுவினர் இப்படத்தை நம்பிக்கையுடன் உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் கதை நாயகனாக கனடா வாழ் புலம் பெயர்த் தமிழரும், கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படமான "1999" நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். தமிழில் வெளியான கலாபக்காதலன், திக்திக் ஆகிய திரைப்படங்களை இயக்கிய, இகோர் இத்திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க, பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல், இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனம்,வசனங்கள் அ. திருநாவுக்கரசு, ஒளிப்பதிவாளர் தே.ஸ்ரீ.வாசன், படத்தொகுப்பாளர் ரேம்ப் கா.முத்து ஆகியோரின் முயற்சியில் இத்திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

No comments:

Post a Comment