Sunday, January 8, 2012

முள்ளிவாய்க்காலில் வியட்நாம் இராணுவத்தினர் பிரசன்னம்: அதிர்ச்சி புகைப்படங்கள் !

இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வியட்நாம் இராணுவத்தினர் பிரவேசித்ததற்காக சான்றுகள் தற்போது வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இறுதியாக சமர் புரிந்த இடங்களிலும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளனர். அங்கே நடந்தது என்ன , இராணுவம் புலிகளை எவ்வாறு தோற்கடித்து முன்னேறியது என்பது போன்ற தகவல்களை இவர்கள் பெறுவதற்காகவே தாம் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளபோதும், இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு பாக்கிஸ்தான் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பல கனரக ஆயுதங்களை வழங்கியிருந்தது. இருப்பினும் வியட்நாம் இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது தெரியாத நிலை காணப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த பொதுமக்களும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் தாம் இந்திய இராணுவத்தையும் மற்றும் சீன இராணுவத்தினர் சிலரைக் கண்டதாகவும் முன்னர் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் சீனர்களா இல்லை வியட்நாம் இராணுவத்தினரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. வியட்நாம் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட பல சிவிலியன்களையும் கிளர்ச்சியாளர்களையும் வியட்நாம் இராணுவத்தினர் எவ்வாறு வெடிப் புதைத்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். மற்றும் கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் கூட மிச்சம் விடாமல் அதனை திரவகம் கொண்டு அழித்தும் உள்ளனர். இந் நடவடிக்கையில் தேர்ச்சி பெற்ற வியட்நாம் இராணுவத்தை இலங்கை அரசானது முள்ளிவாய்க்காலுக்கு ஏன் அழைத்தது ? அதுவும் இவர்கள் விஜயம் குறித்து இலங்கை ஊடகங்களுக்கு அறிவிக்காமல் இதனை ஒரு இரகசியமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் தான் என்ன ? இவை அனைத்துமே பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இலங்கை மேல் சீனா இந்தியா போன்ற நாடுகள் தான் ஆர்வம் காட்டி வருகிறது என்று அனைவரும் நினைக்கும் இவ்வேளையில் புதிய வரவாக வியட்நாமும் இருப்பது இந் நாடுகளையும் அதிர்ச்சியடைய வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை !

No comments:

Post a Comment