Tuesday, January 17, 2012

வட மாகாண முதல்வராக டக்ளஸ் வருவதை விரும்பாத அமெரிக்கா

வட மாகாண முதல் அமைச்சராக அல்லது வட மாகாண இடைக்கால ஆட்சி நிர்வாகத்தின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகின்றமையை அமெரிக்கா விரும்பவில்லை. விக்கிலீக்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்டு உள்ள இரகசிய ஆவணக் குறிப்பு ஒன்றில் இருந்து இவ்விடயம் உறுதியாக தெரிய வந்து உள்ளது. டக்ளஸ் தேவானந்தா - அரசின் வட மாகாணத்துக்கான ஆள் என்கிற தலைப்பில் ஆவணம் எழுதப்பட்டு உள்ளது. கொழும்பில் உள்ள தூதரகத்தின் உயர்நிலை அதிகாரிகளில் ஒருவரான Michael DeTar இவ்வாவணத்தை அனுப்பி இருக்கின்றார். இதில் தேவா புலிகளின் ஜென்ம விரோதி என்றும் வன்முறைகளிலும், குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட பின்னணியை கொண்டவர் என்றும் ஏதோ கொஞ்சம் திருந்தி இருக்கின்றார் என்று தெரிகின்றது என்றும் உள்ளது. இவர் அரசின் மிக விருப்பத்துக்கு உரிய தெரிவு ஆவார் என்றும் வட மாகாணத்துக்கான ஆட்சியை தேவாவிடம் கையளிக்க அரசு விரும்புகின்றது என்றும் வட மாகாணத்தை குறிப்பாக யாழ்ப்பாணத்தை அரசின் இரும்புப் பிடியில் தொடர்ந்து வைத்திருக்க இந்த யுத்தி அரசுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றும் ஆவணத்தில் உள்ளது. தேவாவுக்கு அரசில் தொடர்ந்தும் செல்வாக்கு உள்ளது என்றும் ஆனால் தேவானந்தாவின் இரச்சியம் ஒன்றை வட மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டாம் என்று தூதரகம் இலங்கையின் அரசுத் தரப்பினரிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி உள்ளது என்றும் ஆவணத்தில் உள்ளது. தேவாவுக்கு யாழ்ப்பாணத்தில் பெரிதாக செல்வாக்கு கிடையாது, ஆனால் மாகாண தேர்தல் ஒன்றை நடத்துகின்ற அரசு தில்லுமுல்லு பண்ணி தேவாவின் ஆட்சியை யாழ்ப்பாணத்தில் கொண்டு வரக் கூடும். இதனால் தேவாவின் ஈ.பி.டி.பி கட்சிதான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற விம்பம் தோற்றுவிக்கப்பட்டு விடும், இது போருக்கு பிந்திய தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை ம்ழுங்கடித்து விடும் என்றும் ஆவணத்தில் உள்ளது.

No comments:

Post a Comment