Friday, January 20, 2012

இன்றைய இளசுகளின் கனவுக்கன்னி ரிச்சாவுடன் ஒரு நேர்காணல்! (சிறப்பு வீடியோ)

ஒன்றல்ல இரண்டல்ல..! தெலுங்கில் உருவான லீடர் படத்துக்கு மொத்தம் 800 புதுமுகங்கள்! அவர்களில் இருந்து சலித்து எடுக்கப் பட்டவர்தான் இந்த ரிச்சா கங்கோபாத்யாய்! பிறந்தது டெல்லியில்� அதன் பிறகு படித்தது வளர்ந்த்து எல்லாம் அமெரிக்காவின் நார்த்வில்லியில். சினிமாவுக்காகவே உங்களது பெற்றோர் உங்களை வளர்த்தார்களா? இல்லை இல்லை! அப்படி எந்த திட்டமிடலும் இல்லை. ஆனால் நான் ஒரு வாத்திய இசைக்கலைஞராக இன்னோரு பக்கத்தில் புகழ்பெற வேண்டும் என்று அப்பா விரும்பினார். இதனால் என்னை அப்பா அந்த்ரா என்ற செல்லபெயரில்தான் கூப்பிடுவார். அந்த்ரா என்ற பெங்காலிச் சொல்லுக்கு பல்லவி என்று அர்த்தம். என்னை சிறு வயதிலேயே வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக்கொள்ள வைத்தார்கள். கலைத்துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு வயலின் ஏற்படுத்தியது என்று சொல்லலாம்! ஆனால் 2007 -ல் அமெரிக்காவில் நடந்த இந்திய அழகிப் போட்டியில் வென்றதுதான் என்னோட எனக்கு டர்னிங் பாயின்ட். இந்த டைட்டிலை வென்ற பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வரிசையாக வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக வாடிகா ஹேர் ஆயில், பீட்டர் இங்லாண்ட் விளம்பரங்களைப் பார்த்தே தெலுங்குப் படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு வந்தது. டோலிவுட்டின் முக்கியமான சினிமா தாயாரிப்பாளர் குடும்பத்தில் இருந்து அறிமுகமான ராணா டக்குபாயுடன் லீடர் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு என்னை தென்னிந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்துகாக 800 புதுமுகங்களுக்கு ஆடிஷன் செய்து இறுதியில் நான் தேர்வானதை பெருமையாக நினைக்கிறேன். அதன்பிறகு மிரபகே. மூன்றாவதாக பி.வாசு சாரின் நாகவள்ளி என்று தெலுங்கில் பிஸியானபோதுதான் மயக்கம் என்ன படத்துக்கு செல்வராகவன் அழைத்தார். நான் இயக்கும் தெலுங்குப் படத்தில், ராணாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க முடியுமா என்று கேட்டார் செல்வராகவன். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் டிராப்பாகி விட்டது. அந்தப் படத்துக்கான கால்ஷீட்டைதான் மயக்கம் என்ன படத்திற்கு கொடுத்தேன். என எதையும் மறைக்காதவர் போல பந்தா எதுவும் இல்லாமல் மஞ்சள் சேலையில் சிரித்தபடி பேசினார் ரிச்சா. ஆனால் ஒரு விஷயத்தை மறைத்து விட்டார்� அதையே நாம் கேள்வியாக வைத்தோம். உண்மையில் கமல் தற்போது இயக்கி வரும் விஸ்வரூபம் படத்துக்குத்தான் நீங்கள் முதல் தேர்வு செய்யப்பட்டீர்கள் என்று செய்திகள் வெளியானதே?விஸ்வரூபத்தில் எனது கேரக்டர் என்ன என்பதை செல்வராகவன் சொன்னார். அவர்தான் என்னை கமல் சாரிடம் அறிமுகப்படுத்தவும் செய்தார். கமலுடன் நடிப்பதை எபோதுமே லைப் டைம் ஆஃபராக நினைப்பேன். அனால் விஸ்வரூபம் கேரக்டரில் நடித்தால் எனது சினிமா கேரியர் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று உள்மனம் சொன்னது. அதனால் நேர்மையாக எனது எண்ணத்தை சொல்லி விட்டேன். இது தொடக்க கட்டத்திலேயே நடந்தது. இதில் மறைக்க எதுவுமில்லை! மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய இரண்டு படங்களிலும் இவ்வளவு திறமையான நடிப்பை வெளிகாட்டியிருக்கிறீர்களே ! இத்தனை நடிப்புத்திறன் எப்படி? கல்லூரியில் மூன்றான்றுகள் தொடர்ந்து இங்லீஷ் தியேட்டரில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதன்பிறகு அமெரிக்காவில் இருந்து வாய்ப்புகள் தேடி மும்பை வந்ததும், பாலிவுட்டின் அற்புதமான நடிகர்களில் ஒருவரான அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர்ஸ் பிரிபேர் நடிப்புப் பயிற்சியில் பங்குபெற்றேன். அது நல்ல அனுபவமாக அமைந்தது. ஆனால் இந்த பயிற்சியை விட, தற்போது நான் அதிகம் நம்புவது, நடிப்பை நம்மிடமிருந்து வெளியே எடுக்கும் இயக்குனர்களின் திறமையை! செல்வராகவன் ஒரு காட்சிக்கு கூட நடித்துக் காட்ட வில்லை. காட்சியின் மூடை உருவாக்கி, நம்மிடமிருந்து நடிப்பை எடுத்து விடுவதில் திறமையான இயக்குனர். மயக்கம் என்ன படத்தில் எனக்கு கிடைத்திருக்கும் எல்லா பாராட்டுகளுக்கும் செல்வராகவன்தான் காரணம். அதேபோல ஒஸ்தி ஒரு கமர்ஷியல் படம் என்பதால் அதில் அழகாக என்னை காட்டிக்கொள்வதில் ஈடுபாடு காட்டினேன். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்! குஷ்பூ, மீனா, சிம்ரன் வரிசையில் ரிச்சாவுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கிறது. தமிழ் சினிமாவால் அவரைத் தவிர்க்க முடியாது என்று செல்வராகவன் உங்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தார். ஆனால் மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு உங்களுக்கு வாய்ப்புகள் வந்ததாக தெரியவில்லையே? வாய்ப்புகள் வரவில்லை என்று யார் சொன்னது?! இதுவரை சுமார் 25 கதைகள் கேட்டிருகிறேன். எல்லாமே என்னை கிளாமர் ஹீரோயினாக டைப் காஸ்ட் செய்யத் துடிப்பவை. அதனால் தவிர்த்து விட்டேன். என்றாலும் கிளாமரோடு எனது நடிப்புத் திறமைக்கும் தீனி போடும் இரண்டு வாய்ப்புகளை தமிழில் தேர்வு செய்திருகிறேன். அவை இரண்டுமே இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப் படலாம். அதற்கு முன்பு தற்போது என தாய் மொழியான பெங்காளியில் ஒரு படம் ஒப்புகொண்டிருகிறேன். இது விக்ரமார்குடு தெலுங்குப் படத்தின் பெங்காளி ரீமேக். இது தவிர வராதி என்ற தெலுங்குப் படத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும். இதில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறேன். இந்த இரண்டு படங்களும் முடியவே ஆகஸ்ட் ஆகிவிடும். கிளாமர் கதாபாத்திரங்கள்தான் உங்களுக்கு பொருந்தும் என்று நினைக்கிறீகளா? நிச்சயமாக இல்லை. எனக்கு நீச்சல் உடையோ பிகினியோ சரியாக வராது. ஆனால் இன்று இந்திய சினிமாவில் முத்தக் காட்சிகள் சர்வசாதரணமாகிவிட்டன. கதைக்கு மிக மிக அவசியம் என்றால் முத்தக் காட்சியில் நடிக்கத் தயார். ஆனால் பிகினிக்கு நோ! சுசி.கணேசன் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கும் திருட்டுப் பயலே இந்திப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினீர்களாமே? தவறு என்னுடையது அல்ல. படத்தை சப்டைட்டிலுடன் எனக்கு டி போட்டுக் காட்டினார் இயக்குனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தெலுங்கில் தற்போது நடித்து வரும் வராதி படத்துக்கு கொடுத்த தேதிகள், அவர்கள் கேட்கும் கால்ஷீட்டுடன் கிளாஷ் ஆகிறது. ஆனால் தெலுங்குப் படத்தை முடித்து விட்டு வரும் வரை காத்திருக்க முடியாது என்றார்கள். கால்ஷீட் பிரச்சனை மட்டும் வந்துவிடகூடாது என்று நினைப்பவள் நான். அவர்கள் வேண்டாம். என்று சொன்ன பிறகே பெங்காளிப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். என் மீது எந்தத் தவறும் இல்லை. மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்கும் திட்டமிருகிறதா? தெரிந்துதான் கேட்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. 2013-ல் மீண்டும் செல்வா படத்தில் நடிக்கும் திட்டமிருகிறது. அவர் சொன்ன கதை என் கனவுகளில் வந்து கொண்டிருகிறது. தமிழின் மிக பிரமாண்டமான ஃபேண்டஸிப் படமாக அது இருக்கும்!

No comments:

Post a Comment