Thursday, January 26, 2012

நண்பன் படத்திற்கு புது பிரச்சனை!!

பாரி,பூரி, கக்கூஸ்காரி - பிரச்சனையிலிருந்து இன்னும் இயக்குநர் ஷங்கர் முழுவதும் வெளிவராமல் முழித்துக் கொண்டிருக்க, புது பிரச்சனை கிளம்பிக் கொண்டிருக்கிறது. விருமாண்டி சந்தானம் என்ற சத்யராஜ் கேரக்டர் வீட்டு வாசலில் இருக்கும் பெயர் பலகையை சிதைத்து அதில் மூத்திரம் போவது போன்று ஷாட் இருக்கிறது அது தான் பிரச்சினை. தேவர்களின் ஓரு பிரிவினர் பயபக்தியுடன் கும்பிடும் சாமி ‘‘விருமாண்டி’’ அதை எழுதி வைத்து அதில் டைட் ஷாட்டில் மூத்திரம் போவது எங்கள் சாமியை அவமதிப்பதாகும் என்று சிலர் குமுறுகிறார்கள்.? இதில் என்ன தப்பு என்று அவர்களிடம் கேட்க? திருப்பதி, வெங்கடாஜலபதி,அய்யப்பன், அல்லது ஏசுராஜா என்ற பெயரில் அந்த கேரக்டர் இருந்து டைட் ஷாட்டில் அதன் மீது மூத்திரம் போவது போல ஷங்கர் எடுத்திருப்பாரா? அவர் முதல் படமே ரிசர்வேசனுக்கு எதிராக இருந்தது. ஷங்கர் ஏதோ விஷமத்துடன் எடுத்திருக்கிறார், அதனால் அந்த ஷாட்டை உடனே நீக்க வேண்டும் என்றார்கள்… அடடே! அவர்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கிறதே என்று ஷங்கர் அணியில் சிலரிடம் கேட்டோம்,அவர்களோ, அது படத்தில் வரும் ஓரு கேரக்டர் பெயர் அவ்வளவே, படத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் நாங்கள் ஓன்றும் விருமாண்டி என்று எழதப்பட்ட கோவிலில் மூத்திரம் போவதாக காட்டவில்லையே? மேலும் அந்த பகுதியை சேர்ந்த வைரமுத்துவின் மகன் கார்க்கிதான் வசனம் எழுதியிருக்கிறார், அவர் knowledgeக்கு இந்த மாதிரியான சென்சிடிவ் விஷயங்கள் தெரியாதா என்ன? என்று பதில் சொல்ல! அடடே! இந்தப்பதிலும் சரியாகத்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment