Tuesday, January 17, 2012

ராஜிவ் காந்தியிடம் இலஞ்சம் வாங்கிய பிரபா!

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரன் பெரும் தொகை இலட்ச ரூபாவை இலஞ்சமாக பெற்று இருக்கின்றார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு பிரபாகரனை இணங்க வைக்கின்றமைக்கு ராஜிவ் இற்கு வேறு வழி தெரிந்து இருக்கவில்லை. மாதாந்தம் ஐந்து மில்லியன் இந்திய ரூபாய் வழங்கப்படும் என்று இணக்கம் காணப்பட்டு இருக்கின்றது. ஜூலை மாத இறுதியில் ஒரு தொகைப் பணம் கையளிக்கப்பட்டும் இருக்கின்றது. இந்திய தூதுவராக இருந்த டி.என். டிக்ஸிற், புலிகளின் சென்னைப் பேச்சாளர் ஆகியோரை மேற்கோள் காட்டி அந்நாட்களில் இத்தகவல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்து இருந்தது. மேற்சொன்ன விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு இரகசிய அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டும் உள்ளது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. தமிழ் - முஸ்லிம் மக்களின் இணைந்து தாயகப் பிரதேசமாக வடக்கு - கிழக்கு ஏற்று, தமிழை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளூடாக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்த இவ்வொப்பந்தம் ஏற்பாடு செய்தது.

No comments:

Post a Comment