இந்தியன் ஆமி செய்த கொடுஞ்சித்திரவதை! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)

இந்தியன் ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள் உலகறியும். கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் என்று இலங்கை ஆமியை மிஞ்சிய செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன. அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன் ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே இவை... இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால் தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர் இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. குறித்த காட்சிகள் அடங்கிய Youtube வீடியோவுக்குக் கீழ் வாசகர் ஒருவர் எழுதிய கருத்து அனைவரையும் யோசிக்க வைப்பதாக உள்ளது. அந்தக் கருத்து அப்படியே வாசகர்களுக்காக, "பாரத தேசத்து தமிழ் நாட்டு மக்களிற்கு... முதலில் உங்களை சுற்றியும் சுத்தம் செய்யவும்... அதன் பிறகு அண்டைய நாட்டிற்காக கருப்பு கொடி பிடிப்பதும், நடிகர் நடிகைகளுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதும், தீ குளிப்பதும் சிறந்தது."
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

 • Image
 • Image
 • Image
 • Image
 • Image
  Blogger Comment
  Facebook Comment

1 comments:

 1. மேலே உரையுடன் சொருகப்பட்டுள்ள வாசகர் கருத்து சிறிதளவும் அறிவற்ற கருத்து. இந்த கருத்து இலங்கையில் நடந்த தமிழின படுகொலையை விட்டு வாயை மூடி அமைதியாக அடிமையாக வாழுங்கள் என்பது போன்றதாகும். உலகில் எங்கு அரச பயங்கரவாதம் நடந்தாலும் அது மனித இனத்திற்கு இழிவுதான். இதில் இந்திய அரசும் ராணுவமும் விதிவிலக்கல்ல. இந்திய ராணுவம் , அரசும் போற்குற்றவாளிதான். இலங்கையில் செய்ததைத்தான் இந்திய ஒன்றிய எல்லையோரங்களிலும் செய்து வருகிறது இந்திய ராணுவம். இதை புரிந்து பேசுங்கள். பங்களாதேஷ் எல்லையில் இந்திய ராணுவம் செய்த கொடூர கொலை, இந்திய இராணுவத்தையும், அரசையும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று இதனால் இலங்கையில் நடந்த தமிழின படுகொலையை மறந்து விட்டு முதலில் இதை பார் அதை பார் என்பது பகுத்தறிவு இல்லை என்பதை குறிக்கும்.

  ReplyDelete