Friday, January 20, 2012

நான் அமைதியா இருந்தா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் !

சினிமாவில் நான் தொடர்ந்து நடிப்பேன். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி, என்று கூறினார் வடிவேலு. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வடிவேலு பிரச்சாரம் செய்தபோது, விதிமுறை மீறல் நடந்ததாக தேர்தல் ஆணையம் வடிவேலு மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் நேற்று நத்தம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் வடிவேலு. விசாரணை முடிந்து, வெளியில் வந்த நடிகர் வடிவேலு நிருபர்களிடம் பேசுகையில், "நானாகத்தான் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்துள்ளேன். தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன். புதிய படத்தில் ஒன்றில் நான் கதாநாயகனாக நடிக்க உள்ளேன். அதற்காக நல்ல கதை கிடைத்து உள்ளது. தொடர்ந்து நான் மக்களை சிரிக்க வைக்க வருவேன். அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை," நான் அமைதியா இருந்தா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்றார். அதிமுகவில் சேரப்போகிறீர்களாமே என்று ஒருவர் கேட்டபோது, வெளியில் ஆயிரம் பேசிக்கிருவாங்க... அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டிருக்க முடியுமாண்ணே, என்று கேட்டுவிட்டு கிளம்பினார் வடிவேலு. வடிவேலுவை பார்க்க ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டுவிட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நடிகை குஷ்பு மீதும் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு இந்த நீதிமன்றத்துக்கு வந்து போனார்.

No comments:

Post a Comment