Wednesday, December 7, 2011

மூன்று கோரிக்கைகளை முன்வைத்தது கூட்டமைப்பு! தூக்கி எறிந்தது அரசு!!

கடந்த ஒரு வருட காலமாக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

இருந்தும் கடந்த சில தினங்களுக்கு முன் இப் பேச்சுக்களில் சிறிய முறிவு நிலை ஏற்பட்டிருந்து பின்னர் ஒரு இனக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் இன்று பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான முக்கிய மூன்று விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற 16ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்பு இவற்றை செயற்படுத்த முடியாதென மறுத்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்
02.மாகாணத்திற்கு சட்டம், ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம்
03.அரச காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல்

போன்ற நாம் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

ஆனால் அந்த மூன்று கோரிக்கைகள் குறித்தும் நாம் அரச தரப்பிடம் விளக்கமளித்தோம். பேச்சுவார்த்தையின் அடுத்த சுற்று எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது." என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

No comments:

Post a Comment