Sunday, December 25, 2011

தமிழகத் தமிழர்களைப் பழிவாங்கும் எண்ணமே இலங்கைத் தமிழர்களுக்கெதிரான போர்!

இந்தியாவில் உள்ள மலையாளி மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பல நாட்களாகத் தொடர்ந்தும் முறுகல் நிலை காணப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இலங்கையின் அயல் நாடாகவும் ஆசியாவின் பிராந்திய ஆதிக்க சக்தியாகவும் விளங்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கேரளாவின் மலையாளிகளுக்குமான முறுகல் தொடர்கதையாகி வருகின்றது. தமிழக தமிழர்களுடன் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்களுடனும் மலையாளிகள் தொடர்ந்து முரண்பட்ட அல்லது எதிர் நிலையே எடுத்து வருவதை நாம் கடந்தக் கால வரவாற்றினை எடுத்துப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழக தமிழர்களை பழி வாங்கும் எண்ணத்துடனயே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியாவின் மத்திய அரசிலும் சர்வதேச ரீதியாகவும் மலையாளிகள் எடுத்து வருகின்றமை கண்கூடு. இந்திய வெளியுறவுத்துறையில் கோலோச்சிய சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் ஆகிய மலையாளிகள் இலங்கைத் தமிழர்களின் தொப்புல் கொடி உறவுகளான தமிழகத்தின் கதறலை காதில் வாங்காமல் மகிந்த அரசின் ஊது கோலாகவும் சேவகர்களாகவுமே செயல்பட்டு வந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment