எப்போதெல்லாம் அழைக்கிறேனோ அப்போதெல்லாம் நீ வேண்டும் - பலாத்கார படத்தின் விளைவு

பெண்கள் இப்படி கூடவா செய்வார்கள் என்று அதிர வைக்கின்றன சில சம்பவங்கள். தற்போது நடந்திருப்பது நாகர்கோவில் பகுதியில். நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண் திருமணம் ஆனவர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடந்திருக்கிறது இந்த கள்ளக்காதல். ஜாலியாக ஊர் சுற்றி உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக க.கா. டெவலப் ஆகிவந்த நேரத்தில் வாலிபருக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணா.. இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்ற வசனம் ஞாபகத்துக்கு வந்ததா தெரியவில்லை.. வாலிபர் திடீரென திருந்தி விட்டாராம். கள்ளக் காதலியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். அவளை சந்திப்பதை குறைத்தார். கணவன் இருந்தும் இத்தனை நாள் நான் காதலிக்கவில்லையா.. உனக்கு திருமணம் என்றதும் விட்டுவிட்டு ஓடப் பார்க்கிறாயா? என்றாள் காதலி. இருவரின் வருங்காலம், குழந்தை, குட்டிகள் என்று அவன் சொன்ன அட்வைஸ்கள் அவள் காதில் ஏறவில்லை. எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, நீ வர வேண்டும். ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன். என்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பலாத்காரம் செய்ததாக போலீசில் சொல்லி கம்பி எண்ண வைத்துவிடுவேன்� என்றாள். காதல் பார்வை மட்டுமே தெரிந்த கள்ளக் காதலி கண்ணில் கனல் தெறித்ததும் மிரண்டு போனார் வாலிபர். காதலிகிட்டேயிருந்து காப்பாத்துங்கய்யா என்று போலீசில் புகார் கொடுத்தார். ஒரு பெண்ணா இப்படி மிரட்டியிருக்கிறாள் என்று போலீசுக்கே அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரித்தனர். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறேன். அவன்தான் என் உலகம். அவன் சந்தோஷத்துக்காகத்தான் வாழ்ந்து வருகிறேன். அவனை பிரிந்து என்னால் வாழ முடியாது என்பதால்தான் மிரட்டினேன் என்று அழுதாள் அந்த பெண். உனக்கும் கணவர் இருக்கிறார், குடும்பம் இருக்கிறது. அந்த நபரை நம்பி ஒரு பெண் வரப்போகிறாள். இனி, இருவரும் சந்திக்க கூடாது. போனில்கூட பேசக்கூடாது. எதிர்காலத்தை உணர்ந்து, குடும்ப நலனை அறிந்து செயல்படுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீசார். ஆசை அத்துமீறும் வயதில் சில தடுமாற்றங்கள் இருக்கும். அந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்ல ஆள் இருந்தால் யாரும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment