விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேட்ட தாலிக்கொடிக் கேள்வி !

"பிள்ளைகளே இன்று நான் உங்களுக்குப் புதிதாக ஒரு கதை சொல்லப் போகின்றேன்" என்று ஆரம்பித்தார் உபாத்தியாயர். அது என்ன விக்கிரமாதித்தன் கதைதானே என மாணவர்கள் வினவினார்கள். ஆமாம் ! ஆமாம் ! என்ற உபாத்தியாயர் கதையை ஆரம்பித்தார் ! அப்போ, முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தின்மேல் இருந்த வேதாளத்தை படுகஷ்டப்பட்டு பிடித்துக்கொண்டு அதனை தோளில் சுமந்துகொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனது பராக்கிரமத்தையும், விடா முயற்சியையும் வியந்த வேதாளம் மீண்டும் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தது. சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த அமர்வு ஒன்றில் 2 பெண்கள் தாலிக்கொடி பறிக்கப்பட்டதே அதுபற்றி உனக்குத் தெரியுமா என அதுகேட்டது. விக்கிரமாதித்தனும் ஆம் ஆம் அதனை வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தேன் என்றான். மன்னராட்சி ஒழிக்கப்பட்டுவிட்ட அன்றைய காலத்தில், அந்த அமர்வுக்கு அதன் பிரதமரே தலைமை வகித்தார் அல்லவா. வழக்கம் போலவே, வெட்டிப் பேச்சாகப் பல விவாதங்கள் நடைபெற்றாலும் இறுதியில் பணம் சேகரிக்கும் விடயத்தில் பேச்சுப் பலமாகிப் போனது. அவர்கள் பக்கம் மக்களை அணிதிரட்ட எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பயன்தராத காரணத்தால், தமிழீழ தாகத்தோடு தமிழ்த் தேசிய கட்டமைப்புக்கள் பக்கம் நிற்கும் தமிழ் மக்களைப் பிரித்து எடுப்பதற்காக, அவர்களது தேசிய மீள் எழுச்சி நாளான மாவீரர் தினத்தைக் குறி வைத்தனர். அதுவும், கேவலங்களில் முடிவடைந்ததுடன், அதில் பொறுப்பாக நின்றவர்கள் நட்டக் கணக்கைக் காட்டிவிட்டு, நழுவி விட்டார்கள். நடாத்தப்பட்ட போட்டி மாவீரர் தினத்துக்கான கணக்கை மக்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. மக்கள் கணக்குக் கேட்டுத் தொந்தரவு பண்ணும் நிலையை மாற்றுவதற்கு முடியாவிட்டால், மக்களிடம் சென்று பணம் கறப்பது முடியாத காரியம் ஆகிவிடும் என்பதனால், அந்த மூன்றாவது அமர்வு அரங்கம் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது. பிரதமர் விம்மி வெடித்து அழ ஆரம்பித்தார் அறிவாய் அல்லவா என்றது வேதாளம்: ஆமாம் அறிவேன் என்றான் விக்கிரமாதித்தன். அதைப் பொறுக்க முடியாத ஒரு பெண்மணி தனது தாலியைக் கழற்றி ருத்திரகுமாரன் கையில் கொடுத்து, அவரைத் தேற்ற முயன்றார். அங்கு இருந்த இன்னொரு மனிதர், தனது மனைவியிடமும் தாலிக் கொடியைப் பறித்துத் தருவதாக பிரதமரிடம் வாக்குறுதி வழங்கினார். இப்போது கேள்விக்கு வருகின்றேன் என்றது வேதாளம். அந்தப் பெண் எதற்காகத் தன் தாலிக்கொடியை பிரதமரிடம் வழங்கினார் ? அமெரிக்காவில் வாழும் அவரிடம் பணம் இல்லையா ? அல்லது, அவரது தாலிக்கொடியைப் பெற்றுக்கொண்டவர் மனிதனே இல்லையா ? இதற்கு நீ சரியாகப் பதில் சொல்லாவிட்டால், உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று வேதாளம் நிறுத்தியது. விக்கிரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.... சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ள முடியாத புலம்பெயர் தமிழர்களது போர்க் குணத்தை மழுங்கடித்து, அவர்களை ஜனநாயக கூண்டுக்குள் அடைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறைக்காக மக்களிடம் போகும் அளவிற்குத் தரமானவர்களாக பொறுக்கி எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவரும் இவ்வமைப்பில் இல்லை. எனவே, ஏதாவது ஒரு �ஸ்ரண்ட்� அடிப்பதாக நினைத்து பிரதமர் மீண்டும் தன்னைக் கேலிக்குரியவராக நிரூபித்துள்ளார். பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்களும், வங்கி இருப்பும் கொண்ட ஜெயலிங்கத்தின் மனைவி, விரும்பியிருந்தால் இலட்சங்களைக் கூடப் பணமாக வழங்கியிருக்க முடியும். அதை விட்டு, சில ஆயிரம் பெறுமதியான தாலிக்கொடியைக் கொடுத்ததன் மூலம், தமிழ்ப் பெண்களின் தாலிக்கொடிகளைக் குறி வைக்கும் பிரதமரின் திட்டத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைத்தையும் நன்றாகப் புரிந்துவைத்துள்ளார்கள் ! எந்தச் சவால் வந்தாலும் சிந்தித்துச் செயல்படுவார்கள். தமிழீழம் என்ற இலக்கை அவர்கள் அடைவார்கள் என்று சொல்லி முடித்தான் விக்கிரமாதித்தன் ! இதைக் கேட்ட வேதாளம், சரியாகச் சொன்னாய் விக்கிரமாதித்தா ! ஆனால், நீ வாய்திறந்து பேசியதால் நான் உன்னை விட்டுச் செல்கிறேன். இதோ பார்� இப்பொழுது முடிந்தால் என்னைப் பிடித்துக்கொள்� என்று கூறி நழுவிச் சென்ற வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment