Saturday, November 26, 2011

இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே


இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர்.

அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர்.

ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். எங்கேயும், எப்போதும் தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள்.

அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்! ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.

செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment