Saturday, October 22, 2011

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினாரல் கொல்லப்பட்டவர்களின் 24வது ஆண்டு இன்று

இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள்.

இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் இந்திய இராணுவத்தினருடைய மிலேச்சத்தனமான தாக்குதலில் பலியான போதனா வைத்தியசாலைப் பணியாளர்கள் இருபத்தொருவர்.

நோயாளிகளின் நலனுக்காக தம் உயிரைத் தியாகம் செய்த சுடர்களது 24வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்றது.இங்கு வைத்தியசாலையினர், படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment