Wednesday, September 7, 2011

தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநிலத்துக்கும் உண்டு! சிறை மீண்ட கிலானி ஆவேசம்


முருகன், பேரறி​வாளன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொந்​தளித்து இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்தும் ஒரு குரல் ஆதரவாக ஒலிக்கிறது.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். நாடாளு​மன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.கே.ஆர். கிலானி. அவரை சந்தித்தோம்.

வெறும் வாக்குமூலங்களை வைத்தே இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

இந்த மூன்று பேருமே முதன்மைக் குற்றவாளிகள் அல்ல. மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தைப் போல இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி எழுச்சியோடு போராடியதை நான் பார்க்கவில்லை.

தமிழகத்​தை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றி சொல்லவும் போராட்டத்தில் என் பங்களிப்​பைக் காட்டவுமே தமிழகம் வந்தேன்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடை​பட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பதால், மூவரும் விரக்தியில் மனம் உடைந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களைச் சந்தித்தபோது அந்த எண்ணம் தவிடுபொடியானது.

மரண தண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்து இருப்​பது சந்தோஷமான செய்தி. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தாலும், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்​துக்கும் உண்டு.

மாநில அமைச்சரவை கூடி, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் கூறுகிறது.

அதன்படி, தண்டனையைக் குறைக்கச் சொல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி​யதற்கு பதிலாக, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்குப் பரிந்துரை செய்து இருக்கலாம். இப்போதும் கூட அதற்கு அவகாசம் இருக்கிறது.

தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உயர் நீதிமன்றம் விதித்துள்ள எட்டு வாரத் தடை முடியும் முன்பே, மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்...'' என்றார்.

தமிழக அரசு உடனே செயலில் இறங்கட்டும்!

No comments:

Post a Comment