Saturday, September 3, 2011

சென்னையில் நடந்த சங்கமம் தில்லுமுல்லு !


என்னடா பாதர் ஜெகத் கஸ்பர் ரெம்பா நாளா மெளனமா இருக்காரே என்று பார்க்கிறீங்களா ? அஞ்ஞாதவாசம் சென்றவர் போல ஒரு அறிவித்தலும் விடாம அடக்கிவாசிக்கிறார் என்று பார்க்கிறீங்களா ? எல்லாமே ஆட்சி மாற்றம் தான். கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவேளை அதைப்பாவிச்சு கொடி கட்டிப் பறந்த ஆள் ! அதுமட்டுமா "சாஞ்சனா அனுபவம்" என்று இல்லாத ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்ணை கற்பனையாக உருவாக்கி அவர் சொன்னார் என்று நக்கீரனில் பக்கம் பக்கமாக எழுதியவர். ஈப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் விமர்சித்தவர். அதற்கு நக்கிப் பிழைக்கும் நக்கீரனும் ஒரு காலத்தில் களம் அமைத்துக்கொடுத்தது. ஆனால் தற்போது நக்கீரன் கோபாலுக்கும் காஸ்பருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை வந்துவிட்டதாம், இப்ப இருவரும் "கா" (கதைக்க மாட்டாங்க) ...

சரி விடையத்துக்கு வருமோமில...

கலைஞர் ஆட்சியில் இருந்த காலத்தில கனிமொழியை இவர் கைகுள் போட்டு பின்னர் ஆடாத ஆட்டம் இல்லை. தமிழ் நாட்டில் "தமிழ் மையம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினார் காஸ்பர். இதேவேளை உணர்வாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார். அப்பெயரையே தாம் உருவாக்கிக் கொடுத்ததாகவும் ஆனால் சீமான் தனக்கு துரோகம் செய்து தன்னை நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து விலக்கிவிட்டதாகவும் தொலைக்காட்சிக்கும் இணையங்களுக்கும் பேட்டிகொடுத்தவர் இந்த காஸ்பர் தான். இப்போது இவர் குறித்த செய்திகள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கு. இவர் வைச்சிருக்கும் தமிழ் மையத்தால் நடாத்தப்பட்ட "சங்கமம்" நிகழ்ச்சிக்கு தமிழ அரசு செலவழித்த காசு 5 கோடி ! இவர்கள் கூடித் கூத்தடிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து கலைஞர் பணம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் மையம் என்னும் அமைப்பில் காஸ்பர் கனிமொழி மற்றும் முன் நாள் தமிழகப் பெரும் புள்ளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் கூடி 2007ம் ஆண்டு சென்னையில் நடத்திய விழாவே "சங்கமம்" ஆகும். சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவும் இதில் கணிசமான பங்கு வகித்துள்ளார். இந்த விழா நடைபெறும்போது தமிழக அரசு இதற்காக சிறப்பு ஆணையை உள்துறை மூலம் பிறப்பித்து, விழா நடத்த அனைத்துத் துறைகளும் ஆதரவு தர வேண்டுமென உத்தரவிட்டது. நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் விளம்பரம் அனைத்துமே, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் வெளியிடப்பட்டன. இதனால், வேறு வழிகளில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்த தொகை, கனிமொழியின் விளம்பரத்துக்கு செலவிடப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் இந்த வகையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய முதல்வரின் மகளால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்துக்காக, �சங்கமம்� நிகழ்ச்சிக்கு, கிஷ்கிந்தா நிறுவனம் தொப்பிகளை வழங்கியது. ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஆடைகள், தொப்பிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கியது. திரைப்படத் துறையினர் திரையரங்குகளில் இலவச விளம்பரம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர்� என்று சட்ட சபையில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் இந்தக் கூற்று தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்திரராஜன், �கனிமொழியைத் தவிர்த்து விட்டு, ஜெகத் கஸ்பாரையும் ஒதுக்கி விட்டு, இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தும் உத்தேசம் அரசுக்கு உள்ளதா? சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற அதே பாணியில் பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தி, அரசு சார்பில் அது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுமா?� என்று கேட்டார்.

அப்படியொரு திட்டமே கிடையாது என்ற பதில்தான், சுற்றுலாத்துறை அமைச்சரிடமிருந்து வந்தது!

நான்கு வருடங்களில் ஐந்து கோடி செலவானதற்கு இந்த எகிறு எகிறுகிறார்களே, ஸ்பெக்ட்ரம் மூலம் நான்கே மாதங்களில் கிடைத்தது, எத்தனை கோடி என்பது தெரியுமா ?

இந் நிகழ்ச்சியின் பங்குதாரரான ஜகத் கஸ்பர் மட்டும் தப்பி இருப்பது எப்படி என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.

No comments:

Post a Comment