Wednesday, September 7, 2011

அமெரிக்கா பொன்ற இரகசிய வலையமைப்பை நிறுவியது இலங்கை !


அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அந் நாட்டிலுள்ள இராணுவத் தலைமையகங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த இரகசிய வலையமைப்பை நிறுவியுள்ளது போல இலங்கையும் தகவல் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பான மற்றும் இரகசியமான வலையமைப்பு ஒன்றை நிறுவியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கை இராணுவத்தின் பல்வேறு பணியகங்கள், படைப்பிரிவு தலைமையகங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்காக பிரத்தியேகமான இரகசிய குரல், தரவு வலையமைப்பொன்றை இலங்கை இராணுவம் ஸ்தாபித்துள்ளது.

இராணுவத்தின் 30 இற்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைமையகங்கள், கிளைகள், 6 பாதுகாப்புப் படைகளின் தலைமையகங்கள், 14 படைப்பரிவுகள் மற்றும் 22 பிராந்திய தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் விதமாக இவ்வலையமைப்பு அமைந்துள்ளது என மேலும் அறியப்படுகிறது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தலைமையகத்தில் திங்கட்கிழமை இவ்வலையமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இலங்கையின் மிகவும் பாதுகாப்பான வலையமைப்புகளில் ஒன்றாக இதை பேணுவதற்காக அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத் தொழில்நுட்பங்கள் எந்த நாட்டால் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக அவர் வாயைத் திறக்கவே இல்லை. நிச்சயம் அது இந்தியா இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. கொழும்பில் இருந்து அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கிளிநொச்சிவரை இராணுவத்தினர் பேசும்போது அதனை இந்தியா ஒட்டுக்கேட்க்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தடுக்குமுகமாகவே இந்தப் பாதுகாப்பான வலையமைப்பு நிறுவப்பட்டதா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment