Saturday, September 3, 2011

இலங்கை அரசை ஒருபோது நம்பமுடியாது: நா.ம.உ ஸ்ரீதரன் பேட்டி !

இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை என்பது எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர் ப.ஸ்ரீதரன் அவர்கள் . இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்களும், அவை பாதியில் முறிந்துபோயுள்ளது தொடர்பாகவும் அவர் மனம் திறந்து தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். இலங்கை அரசை ஒருபோதும் நம்பமுடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர் மூன்றாம் நாடு ஒன்றின் மத்தியஸ்தம் தேவை என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை அரசு இதயசுத்தியோடு தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறு ஒருபோதும் இருந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் ஏதாவது ஒரு நாடு இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் எனவும் குறிப்பிட்ட ஸ்ரீதரன் அவர்கள் நாளை லண்டன் ஹரோ பகுதியியில் நடைபெறவுள்ள மக்கள் கலந்துரையாடல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் ப.ஸ்ரீதரன் உட்பட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மக்கள் அனைவரும் அங்கே வந்து தமது கலந்துரையாடலில் ஈடுபடலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment