Thursday, September 22, 2011

இலங்கையின் விபச்சாரிகள் எண்ணிக்கை! அதிர்ச்சி ரிப்போர்ட்!!


இது இலங்கையில் கிடைத்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியாகும். இலங்கையில் 30 ஆயிரம் ஓரினச் சேர்கையாளர்களும் 40 ஆயிரம் விபச்சாரிகளும் உள்ளனர் என இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிலும் கொழும்புக்கு தனி இடம் கிடைத்துள்ளது. 8 ஆயிரம் விபச்சாரிகள் கொழும்பில் தொடர்ந்தும் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மருத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் விபசாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரும் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி நாட்டில் விபசாரத்தினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் ஓரினச் சேர்க்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ அதிகார சபை அறிவித்துள்ளதுடன் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளிலேயே இவை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கை அதிகரித்து வருவதனால் அதற்கு எதிராக விழிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுகாதார அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் இதுவரை 1388 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்


மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனமான என்டிஆர்ஓ-வில் பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடிக்கப்பட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ (National Technical Research Organisation -NTRO),கார்கில் ஊடுருவலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

மத்திய அரசு நிறுவனமான இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் உபயோகிக்கும் கழிப்பறையில் "ஸ்பைகேம்" எனப்படும் சிறிய ரக கண்காணிப்பு கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டு, அது இந்த உளவு நிறுவனத்தின் மற்றொரு உளவு ஏஜென்சியின் அதிகாரி ஒருவரது கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.

அந்த கம்ப்யூட்டரில் இருந்தபடி அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்த அதிகாரி கண்காணித்து வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு நடைபெற்றுவந்த நிலையில், ஒருநாள் கழிப்பறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவருக்கு,ஏதோ சந்தேகம் ஏற்பட, அந்த அறையில் உற்று நோக்கியுள்ளார். அப்போதுதான் அங்கு ஸ்பைகேமரா வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் மற்ற பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த, அதனைத் தொடர்ந்து உயரதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடந்த சம்பவம் உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் என்டிஆர்ஓ பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும், இந்த விவகாரம் குறித்து அங்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டுமொரு மேலாடையற்ற தரிசனம் கொடுத்த காஜல் - இதற்கு என்ன விளக்கம் ?(பட இணைப்பு)


நடிகை காஜல் அகர்வால் பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் எப்ஹெச்எம் பத்திரிக்கைக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆனால், நான் டாப்லெஸ்ஸா போஸே கொடுக்கவில்லை என்று கூப்பாடு போட்டார். உடனே அந்த பத்திரிக்கை தாங்கள் சொல்வது தான் உண்மை என்பதை நிரூபிக்க பேஸ்புக்கில் காஜலின் இன்னொரு டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டது.

அதன் பிறகு காஜல் சத்தத்தையே காணோம். இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிக்கையின் செப்டம்பர் மாத இதழின் அட்டைப் படத்திற்காக மீண்டும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார்.

நெட் போன்ற துணியையும், பச்சை நிற ஆப்பிளையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதுக்கு என்ன "டாப் கிளாஸ்" விளக்கத்தைக் கொடுக்கப் போகிறாரோ காஜல்??

Wednesday, September 21, 2011

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் சிறுவன்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இம்சம்பவம் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், மநிதுர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான். அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.

இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன் என கூறினான். இவன் அல்லவோ மானமுள்ள தமிழன் ! அடிபணிவு அரசியலை நடத்தி சிங்களத்தின் கால்களைப் பற்றி நிற்க்கும் சில தமிழர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். நீங்கள் இச் சிறுவனையாவது பார்த்து பாடத்தைக் கற்றுகொள்ளுங்கள். புலிகள் பலமாக இருந்தால் அவர்கள் பக்கம் அவர்கள் பலம் இழந்தால் அரசாங்கப்பக்கம் என பக்கம் தாவும் தமிழர்களுக்குள் இப்படியும் ஒரு சிறுவன்.

Wednesday, September 7, 2011

அமெரிக்கா பொன்ற இரகசிய வலையமைப்பை நிறுவியது இலங்கை !


அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் அந் நாட்டிலுள்ள இராணுவத் தலைமையகங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த இரகசிய வலையமைப்பை நிறுவியுள்ளது போல இலங்கையும் தகவல் பரிமாற்றத்துக்கு பாதுகாப்பான மற்றும் இரகசியமான வலையமைப்பு ஒன்றை நிறுவியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கை இராணுவத்தின் பல்வேறு பணியகங்கள், படைப்பிரிவு தலைமையகங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்காக பிரத்தியேகமான இரகசிய குரல், தரவு வலையமைப்பொன்றை இலங்கை இராணுவம் ஸ்தாபித்துள்ளது.

இராணுவத்தின் 30 இற்கும் மேற்பட்ட பிரிவுகளின் தலைமையகங்கள், கிளைகள், 6 பாதுகாப்புப் படைகளின் தலைமையகங்கள், 14 படைப்பரிவுகள் மற்றும் 22 பிராந்திய தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் விதமாக இவ்வலையமைப்பு அமைந்துள்ளது என மேலும் அறியப்படுகிறது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தலைமையகத்தில் திங்கட்கிழமை இவ்வலையமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இலங்கையின் மிகவும் பாதுகாப்பான வலையமைப்புகளில் ஒன்றாக இதை பேணுவதற்காக அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத் தொழில்நுட்பங்கள் எந்த நாட்டால் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக அவர் வாயைத் திறக்கவே இல்லை. நிச்சயம் அது இந்தியா இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. கொழும்பில் இருந்து அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் கிளிநொச்சிவரை இராணுவத்தினர் பேசும்போது அதனை இந்தியா ஒட்டுக்கேட்க்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தடுக்குமுகமாகவே இந்தப் பாதுகாப்பான வலையமைப்பு நிறுவப்பட்டதா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநிலத்துக்கும் உண்டு! சிறை மீண்ட கிலானி ஆவேசம்


முருகன், பேரறி​வாளன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொந்​தளித்து இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்தும் ஒரு குரல் ஆதரவாக ஒலிக்கிறது.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர். நாடாளு​மன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.கே.ஆர். கிலானி. அவரை சந்தித்தோம்.

வெறும் வாக்குமூலங்களை வைத்தே இந்த மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

இந்த மூன்று பேருமே முதன்மைக் குற்றவாளிகள் அல்ல. மரண தண்டனைக்கு எதிராக தமிழகத்தைப் போல இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படி எழுச்சியோடு போராடியதை நான் பார்க்கவில்லை.

தமிழகத்​தை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்றி சொல்லவும் போராட்டத்தில் என் பங்களிப்​பைக் காட்டவுமே தமிழகம் வந்தேன்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடை​பட்டு மரணத்தை எதிர்நோக்கி இருப்பதால், மூவரும் விரக்தியில் மனம் உடைந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களைச் சந்தித்தபோது அந்த எண்ணம் தவிடுபொடியானது.

மரண தண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்து இருப்​பது சந்தோஷமான செய்தி. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தாலும், தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்​துக்கும் உண்டு.

மாநில அமைச்சரவை கூடி, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் கூறுகிறது.

அதன்படி, தண்டனையைக் குறைக்கச் சொல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி​யதற்கு பதிலாக, அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்குப் பரிந்துரை செய்து இருக்கலாம். இப்போதும் கூட அதற்கு அவகாசம் இருக்கிறது.

தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், உயர் நீதிமன்றம் விதித்துள்ள எட்டு வாரத் தடை முடியும் முன்பே, மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்...'' என்றார்.

தமிழக அரசு உடனே செயலில் இறங்கட்டும்!

புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயர் : பிரபு தேவாவுக்கு எதிர்ப்பு!


பிரபாகரன் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார். விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது. இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர். இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா (வெடியையும் புலிகளையும் மட்டும் பிரிக்க முடியுமா!).

இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன். இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது. விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

என்னை இந்தியா கொண்டு செல்ல தனி விமானம் அனுப்புங்கள்: மாயாவதிக்கு அசாஞ்ச் பதிலடி


என்னை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுப்பி வையுங்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் பதிலடி தந்துள்ளார்.

மாயாவதியின் ஆடம்பரம், அதிகார துஷ்பிரயோகம், உயிர் பயம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக டெல்லி அமெரிக்கத் தூதரகம் தனது தலைமையகத்துக்கு அனுப்பிய ரகசிய கேபிள்களை சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

அதில் புதிய செருப்பு வாங்குவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்குச் சொந்தமான விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார் மாயாவதி என்ற விவரம் இடம் பெற்றிருந்தது. ஆனால் இதை மாயாவதி மறுத்தார்.

அசான்ஞ்சேவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மனநல மையத்தில் சேர்த்துவிடத் தயாராக இருப்பதாகவும் மாயாவதி கூறியிருந்தார்.

இந்நிலையில் மாயாவதியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அசான்ஞ். அவர் கூறுகையில், மாயாவதி தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும், திருந்த முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு பகுத்தறிவுக்குப் பொறுந்தாமல் பேசக் கூடாது. தனது பேச்சுக்கு முதலில் மன்னிப்பு கோர வேண்டும்

வேண்டுமானால் என்னை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல தனது தனி விமானத்தை மாயாவதி லண்டனுக்கு அனுப்பி வைக்கலாம். நான் மிக அதிகமாக நேசிக்கும் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெறக் கூட தயார். மாயாவதிக்கு இங்கிலாந்திருந்து நல்ல செருப்புகளையும் வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

ராணா படப்பிடிப்பு எப்போது: தீபிகா கேள்வி


ராணா படத்தின் நிலவரம் பற்றி எனக்கு எந்த தகவலும் இதுவரை வரவில்லை என தீபிகா படுகோன் கூறியுள்ளார்.

தீபிகா படுகோன் கூறியதாவது: ஆரக்ஷன் இந்தி படம் பிரச்னைக்குள்ளானது பற்றி கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பிரச்னை இல்லாத வேடங்களிலேயே இனி நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.குறிப்பாக காதல் கதைகளையே தேர்வு செய்வேன். ரசிகர்களிடமிருந்து என்னை பிரிக்கும் படியான எந்த பாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன். சில ஹீரோயின்கள் மொட்டை போட்டு நடிக்கிறார்கள்.

அதுபோல் ஒருபோதும் நடிக்க மாட்டேன். காக்டெயில் இந்தி பட ஷூட்டிங்கில் சயீப் அலிகானுடன் நான் நடித்தேன். அப்போது கரீனா கபூர் அடிக்கடி ஷூட்டிங்கிற்கு வருவார். என்னை கண்காணிப்பதற்காகவே அவர் அங்கு வந்ததாக சிலர் கூறுகிறார்கள். அது தவறு.

அவர் ஷூட்டிங் வந்தாலும் என்னுடன் ஜாலியாக பேசுவார். அவர் வந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினாலும் கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அதற்கான நேரம் அமையவில்லை. ரஜினியுடன் நடிக்கும் ராணா படத்தின் நிலவரம் பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அதன் ஷூட்டிங்கிற்கு வரும்படி எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை.

டிவிட்டரில் பிறந்தநாளை அறிவிப்பதற்கு


பேஸ்புக்கில் இருக்கும் வசதி, டிவிட்டரில் இல்லாதது என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்தோ யோசிக்காமலோ சொல்லி விடலாம்.

பேஸ்புக்கில் உறுப்பினராக பதிவு செய்யும் போதே பிறந்த நாள், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விடுவதால் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் தெரிந்து கொள்வது மிகவும் சுலபம்.

ஆனால் டிவிட்டரில் பிறந்த நாள் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதால் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் ஒருவரது பிறந்த நாளை தெரிந்து கொள்ள வழியில்லை.

டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்கு வாழத்து தெரிவிக்க முடிந்தால் நன்றாக தான் இருக்கும். இந்த ஏக்கத்தை நிறைவேற்றும் வகையில் டிவிட்டரில் பிறந்த நாளை பகிர்ந்து கொள்வதற்கான சேவையை டிவீடே தளம் வழங்குகிறது.

டிவிட்டர் சார்ந்த செயலிகளில் ஒன்றான டிவீடேவில் டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பிறந்த தினத்தை குறிப்பிட்டு அதன் பிறகு தங்கள் டிவிட்டர் கணக்கை இயக்கினால் அவர்களடைய பிறந்த நாள் விவரம் டிவிட்டர் நண்பர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இதே போல அவர்கள் யாரையெல்லாம் பின்தொடருகின்றனரோ அவர்களின் பிறந்த தினத்தையும் அறிந்து கொண்டு உரிய நேரத்தில் வாழ்த்த முடியும்.

முகப்பு பக்கத்தில் பிறந்த நாள் கேக்குடன் வரவேற்கும். இந்த சேவை டிவிட்டர் நண்பர்களிடையே மேலும் பிணைப்பை ஏற்படுத்தி கொள்ள உதவும்.

மேடையில் வைத்து மணப்பெண்ணை கடத்திச் செல்ல முற்பட்டார் இளைஞர் : சினிமா பாணியில் சாவகச்சேரியில் சம்பவம்

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டிய பின்னர் மணமகனையும் பெண்ணின் தந்தையையும் தாக்கி விட்டு மணப் பெண்ணைக் கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் பிடிக்கப்பட்டார்.

சினிமாப் பாணியில் நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் கடந்த 31 ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் இளைஞரை விசாரித்த போது மச்சாள் முறையான மணப்பெண்ணை சிறுவயது முதல் விரும்புவதாகவும் தான் விரும்புவது மணப்பெண்ணுக்குத் தெரியாது எனவும், திருமண நிகழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி சினிமாப் பாணியில் அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இளைஞரை மண்டபத்தில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில் மணப்பெண் தாலிகட்டிய கணவருடன் காரில் ஏறிப்பறந்து விட்டார். திருமண ஏற்பாட்டின் பிரகாரம் கடந்த 31 ஆம் திகதி மாலை திருமணப் பதிவும் இடம்பெற்றது.

இளைஞர் திருமண மண்டபத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை வெளிநாட்டில் உள்ள மாப்பிளைக்கு பெண்ணை அனுப்வுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இரகசியமாகத் திருமணப்பதிவு இடம்பெற்றமை தெரியவந்ததையடுத்து மாப்பிள்ளை குடும்பத்தினர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

ஊரில் உள்ள உறவுக்காரப் பெண்ணை வெளிநாட்டில் உள்ள தமது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண்ணின் பெற்றோருடன் கலந்து பேசி ஜாதகம் பார்த்து இரு பகுதியினரும் விருந்துகள் வைத்துள்ளனர். மணமகனின் பெற்றோருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து திருமணப் பதிவுகாரரிடம் விசாரித்த போது திருமணப் பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. அத்துடன் திருமணப் பதிவுகாரருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பெண்ணின் பெற்றோரும் நிற்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Monday, September 5, 2011

அடச்சீ….இப்படியும் ஒரு ஆய்வு-வயது வந்தவங்க படிங்க


நாளுக்கு நான் புதிய பல வித்தியாசமான சுவாரஸ்யமான ஆய்வுகள் மூலம் பல தகவல்களை இன்று நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான ஆய்வுதான். அதாவது பெண்களில் மார்பு அழகை ரசிப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த ஆய்வு. என்ன சிரிப்பாக இருக்கிறதா? அந்த ஆய்வு பற்றிய மேலதிக தகவல்கள் இதோ-
பெண்கள் மேலழகை இரசிக்கின்றமைக்கு ஆண்களுக்கு நல்ல ஒரு சாட்டு கிடைத்து உள்ளது. ஜேர்மன் நாட்டு நிபுணர்கள் குழு ஒன்று நடத்தி இருந்த பிந்திய ஆய்வு ஒன்றின் முடிவு பெண்களின் மேலழகை அடிக்கடி இரசித்து வருகின்ற ஆண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் நீடிக்கும் என்று கூறுகின்றது. இரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள், மன அழுத்தங்கள் போன்ற நோய்களில் இருந்து தப்புகின்றமை சாத்தியமாம்.ஆய்வு 05 வருடங்கள் இடம்பெற்று இருக்கின்றது. 500 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களின் மேலழகை இரசிக்கின்றமைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர் பெண்களின் மேலழகை நோக்கவே கூடாது என்று தடுக்கப்பட்டனர்.
பெண்களின் மேலழகை இரசிக்கின்றமைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஏனையோரைக் காட்டிலும் சுகதேகிகளாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. நாளாந்தம் குறைந்தது 10 நிமிடங்களாவது ஒவ்வொரு ஆணும் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர் பெண்களின் மேலழகை இரசிக்கின்றமை ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று பரிசோதனையின் முடிவில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது

மேலாடை இல்லாமல்(Top-less) புத்தகத்திற்கு போஸ் கொடுத்து கலக்கிய காஜல் அகர்வால் (பட இணைப்பு)


பாரதிராஜாவின், "பொம்மலாட்டம்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், "பழனி", "நான் மகான் அல்ல" உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் நிறைய படங்களிலும் நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்தி "சிங்கம்" மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார்.

தென்னிந்திய நடிகையாக இருந்த வரைக்கும், நான் எப்போதும் கவர்ச்சி காட்ட மாட்டேன், கவர்ச்சி எல்லாம் நமக்கு ஒத்து வராது, நீச்சல் உடை கூட அணிந்து நடிக்க மாட்டேன் என்று ஏகபோக வசனம் பேசி வந்த காஜல், இப்போது துணிச்சலாக மேலாடை இன்றி, டாப் லெஸ் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். பிரபல எஃப்.ஹச்.எம். பத்திரிக்கைகாக, மேலாடை எதுவும் இன்றி, கைகளை மறைத்தபடி இப்படி போஸ் கொடுத்துள்ளார். காஜலின் இந்த டாப்-லெஸ் படம், அந்த இதழின் அட்டை படத்தில், இம்மாதம் வெளிவர இருக்கிறது.

பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக இதுவரை வெளிவராத இரகசியங்கள்

மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்… சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?

யாழ் வரும் சிங்களவர்களைச் சோதிக்க ஆனையிறவில் மனநோய் வைத்தியசாலை !


யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு நோக்குதற்குரியது. தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்கள் என்பது உண்மையாயினும் தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களில் தனித்துத் திரிவதை சாதாரணமான காரணங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது.

இந்நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் இருவரும் மனநோயாளிகள் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் தென்பகுதியைச் சேர்ந்த மனநோயாளிகள் பலர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைகின்றார்கள் என்று கருதவேண்டியுள்ளது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஒருமுறை இலங்கைக்கு வருகை தந்தபோது அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய படையினரில் ஒருவர் தான் வைத்திருந்த துவக்கால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார்.எனினும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய படைத் தரப்பைச் சேர்ந்த நபர் மனநோயாளி என்று கூறப்பட்டது.

பின்னாளில் அந்த மனநோயாளியும் இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆக! ராஜீவ் காந்தியைத் தாக்கியவர் முதல், தற்போது யாழ்ப்பாணத்தைக் கலக்கும் மர்ம மனிதன் வரை மனநோயாளிகள் எனில், நிலைமை மோசமானது என்றே கூறவேண்டும். எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆனையிறவு பகுதியில் மனநோயாளர் வைத்திய சாலை ஒன்றை அமைத்து தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்களை சோதனையிட வேண்டும்.குறித்த நபர் மனநோயாளி அல்ல. அவர் மன ஆரோக்கியம் உள்ளவர் என மருத்துவ நிபுணர்கள் உறுதிச் சான்றிதழ் வழங்கிய பின்பே அவர்களை யாழ்.குடாநாட்டுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தால் எப்படியிருக்கும்? மக்களின் உறக்கத்தைக் கலைத்து அவர்களை பயப்பீதிக்கு ஆளாக்கும் மனநோய் கொண்ட மர்ம மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியேதும் உண்டா ?

நன்றி: வலம்புரி

Saturday, September 3, 2011

சென்னையில் நடந்த சங்கமம் தில்லுமுல்லு !


என்னடா பாதர் ஜெகத் கஸ்பர் ரெம்பா நாளா மெளனமா இருக்காரே என்று பார்க்கிறீங்களா ? அஞ்ஞாதவாசம் சென்றவர் போல ஒரு அறிவித்தலும் விடாம அடக்கிவாசிக்கிறார் என்று பார்க்கிறீங்களா ? எல்லாமே ஆட்சி மாற்றம் தான். கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவேளை அதைப்பாவிச்சு கொடி கட்டிப் பறந்த ஆள் ! அதுமட்டுமா "சாஞ்சனா அனுபவம்" என்று இல்லாத ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்ணை கற்பனையாக உருவாக்கி அவர் சொன்னார் என்று நக்கீரனில் பக்கம் பக்கமாக எழுதியவர். ஈப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் விமர்சித்தவர். அதற்கு நக்கிப் பிழைக்கும் நக்கீரனும் ஒரு காலத்தில் களம் அமைத்துக்கொடுத்தது. ஆனால் தற்போது நக்கீரன் கோபாலுக்கும் காஸ்பருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை வந்துவிட்டதாம், இப்ப இருவரும் "கா" (கதைக்க மாட்டாங்க) ...

சரி விடையத்துக்கு வருமோமில...

கலைஞர் ஆட்சியில் இருந்த காலத்தில கனிமொழியை இவர் கைகுள் போட்டு பின்னர் ஆடாத ஆட்டம் இல்லை. தமிழ் நாட்டில் "தமிழ் மையம்" என்று ஒரு அமைப்பைத் தொடங்கினார் காஸ்பர். இதேவேளை உணர்வாளர் சீமான் அவர்கள் நாம் தமிழர் என்னும் இயக்கத்தை ஆரம்பித்தார். அப்பெயரையே தாம் உருவாக்கிக் கொடுத்ததாகவும் ஆனால் சீமான் தனக்கு துரோகம் செய்து தன்னை நாம் தமிழர் இயக்கத்தில் இருந்து விலக்கிவிட்டதாகவும் தொலைக்காட்சிக்கும் இணையங்களுக்கும் பேட்டிகொடுத்தவர் இந்த காஸ்பர் தான். இப்போது இவர் குறித்த செய்திகள் மெல்ல மெல்லக் கசிய ஆரம்பித்திருக்கு. இவர் வைச்சிருக்கும் தமிழ் மையத்தால் நடாத்தப்பட்ட "சங்கமம்" நிகழ்ச்சிக்கு தமிழ அரசு செலவழித்த காசு 5 கோடி ! இவர்கள் கூடித் கூத்தடிக்க மக்கள் வரிப்பணத்தில் இருந்து கலைஞர் பணம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் மையம் என்னும் அமைப்பில் காஸ்பர் கனிமொழி மற்றும் முன் நாள் தமிழகப் பெரும் புள்ளிகளும் இருக்கிறார்கள். இவர்கள் கூடி 2007ம் ஆண்டு சென்னையில் நடத்திய விழாவே "சங்கமம்" ஆகும். சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திராவும் இதில் கணிசமான பங்கு வகித்துள்ளார். இந்த விழா நடைபெறும்போது தமிழக அரசு இதற்காக சிறப்பு ஆணையை உள்துறை மூலம் பிறப்பித்து, விழா நடத்த அனைத்துத் துறைகளும் ஆதரவு தர வேண்டுமென உத்தரவிட்டது. நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் விளம்பரம் அனைத்துமே, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் வெளியிடப்பட்டன. இதனால், வேறு வழிகளில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு லாபமாகக் கிடைத்த தொகை, கனிமொழியின் விளம்பரத்துக்கு செலவிடப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் இந்த வகையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய முதல்வரின் மகளால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்துக்காக, �சங்கமம்� நிகழ்ச்சிக்கு, கிஷ்கிந்தா நிறுவனம் தொப்பிகளை வழங்கியது. ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு ஆடைகள், தொப்பிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கியது. திரைப்படத் துறையினர் திரையரங்குகளில் இலவச விளம்பரம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர்� என்று சட்ட சபையில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் இந்தக் கூற்று தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்திரராஜன், �கனிமொழியைத் தவிர்த்து விட்டு, ஜெகத் கஸ்பாரையும் ஒதுக்கி விட்டு, இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தும் உத்தேசம் அரசுக்கு உள்ளதா? சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்ற அதே பாணியில் பாரம்பரிய கலைஞர்களை பயன்படுத்தி, அரசு சார்பில் அது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுமா?� என்று கேட்டார்.

அப்படியொரு திட்டமே கிடையாது என்ற பதில்தான், சுற்றுலாத்துறை அமைச்சரிடமிருந்து வந்தது!

நான்கு வருடங்களில் ஐந்து கோடி செலவானதற்கு இந்த எகிறு எகிறுகிறார்களே, ஸ்பெக்ட்ரம் மூலம் நான்கே மாதங்களில் கிடைத்தது, எத்தனை கோடி என்பது தெரியுமா ?

இந் நிகழ்ச்சியின் பங்குதாரரான ஜகத் கஸ்பர் மட்டும் தப்பி இருப்பது எப்படி என்று தெரியவில்லை. இது தொடர்பாக அவர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது.

மார்பழகு மட்டுந்தான் கவர்ச்சியா?: ஆதங்கப்படும் இலியானா


இலியானாவிடம் கவர்ச்சியைப் பற்றி கேட்டால் சீறி விழுகிறாராம். இதற்கென தனியே தத்துவம் ஒன்றையும் உதிர்க்கிறாராம்.
அப்படி என்னதான் தத்துவம், அதை எதற்குத்தான் அவர் உதிர்க்கிறார் என்பதை அவருடைய பதிலில் இருந்தே நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.

இனி அவருடைய கவர்ச்சித் தத்துவம். "மார்பழகு இருந்தால் மட்டுமே 'செக்ஸி' என்று நினைத்தால் அது தப்பான எண்ணம்.

ஒரு பெண்ணின் கண்களிலும், வாளிப்பான உடல் அழகிலும்தான் உண்மையான கவர்ச்சியும் வசீகரமும் இருக்கிறது." என்கிறார் இலியானா.

ஏன் இந்த மார்பழகு தத்துவத்தை இவர் உதிர்க்கிறார் என்று புரிந்து கொண்டீர்களா..?

சீயான் விக்ரமிற்கு பிடித்த கதாநாயகி யார்?


சீயான் விக்ரம் அண்மையில், சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவிற்கு, சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.
அங்கே கூடியிருந்த கல்லூரி மாணவிகள் சிலர் அவரிடம் சில சுவாரசியமான கேள்விகளை கேட்டனர். அதற்கு விக்ரம் பளிச்சென்று பதில் அளித்தார். அந்த கேள்வி – பதில் அப்படியே இங்கே..!

சீயான்னா என்ன அர்த்தம்?

பெருசு, தலன்னு அர்த்தம்

பிடித்த கதாநாயக, நாயகிகள்..?

பிடித்த கதாநாயகர்கள் ஷாரூக்கான், சல்மான் கான். கதாநாயகிகளின் லிஸ்ட் ரொம்ப பெரிசு. ஒவ்வொரு படத்துக்கு தகுந்த மாதிரி மாறும்.இப்ப ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்காவேதான். எப்பவும் பிடிச்ச கதாநாயகி சாராதான். (தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்தான் சாரா)

வெற்றியின் ரகசியம்?

எங்கேயும், எதற்கும் விழுந்து விடாமல் இருப்பது!

"முத்தக்காட்சியா": டைரக்டர்களை கலங்க வைக்கும் டாப்சீ


ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், கொமெடி என எல்லாம் கலந்து டைரக்டர் கண்ணன் இயக்கியுள்ள "வந்தான் வென்றான்" படத்தில் நாயகன் ஜீவாவுடன் நாயகியாக டாப்சீ நடித்துள்ளார்.

இந்த படத்தில் "அஞ்சனா" என்ற ரோலில் மில்லியனர் வீட்டு பெண்ணாக வருகிறேன். இந்த ரோலில் தமிழ் வசனத்தில் நான் நடிக்க ஆறு வாரம் பயிற்சி எடுத்து கொண்டேன். திரைக்கதைக்கு பொருத்தமான வகையில் நான் நடித்துள்ளேன். என்னுடன் இணைந்து புரபசனல் நடிகராக திறமையை காட்டி இதில் நடித்துள்ளார். எல்லோரிடமும் நட்பாக பழகும் நடிகர் அவர். தெலுங்கில் ஜீவா நடித்த "ரங்கம்" படத்தை பார்த்திட்டு மிரண்டு போனேன். அதில் அப்படி அட்டகாசமாக நடிச்சிருந்தார் என்கிறார் டாப்சீ.

ஹீரோவுடன் நெருங்கி, தாராளமாக நடிப்பீர்களா? படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க "ஓ.கே" சொல்வீங்களா?' என்று கிடுக்கு பிடி போடுகிறவர்களிடம் எரிச்சலை கொட்டித்தீர்த்துள்ளார் டாப்சீ.

"நோ..நோ..எனக்கு அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க பிடிக்காது. என்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களிடமும் நான் இதை சொல்லியிருக்கிறேன்" என்று கூறி டைரக்டர்களை டாப்சீ கலங்க வைத்துள்ளாராம்.

பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கியது !


உலகில் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்களுக்குள் ஒன்றாக விளங்குவது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரமாகும். சுமார் 1,031 அடி உயரம்கொண்ட இந்தக் கோபுரத்தைப் பார்வையிட வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். கடந்த வருடம் ஜூலை மாதம் இக் கோபுரம் மீது இடி தாக்கியது. அல்லது இடி தாக்கும்போது ஒருவரால் படம்பிடிக்கப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக அக்கோபுரத்தில் இடி தாக்கிய மட்டத்தில் எவரும் இருக்கவில்லை. மாறாக அடுத்த மட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் இருந்திருக்கிறார்கள். பரிஸ் நகரில் சூழவுள்ள பலர் இச் சம்பவதை நேரடியாகப் பார்த்தாலும் அவர்களால் அதனைப் படம் எடுக்க முடியவில்லை. காரணம் ஒரு கணப் பொழுதில் இடி தாக்கி மறைந்தது.

ஆனால் அதனை ஒரு நபர் அப்படியே படம்பிடித்துள்ளார். இக்கோபுரம் மீது இடி தாக்கி (அதாவது மின்சாரம்) பின்னர் இடிதாங்கியினூடாக இந்த மின்சாரம் பூமிக்கு அடியே பாச்சப்பட்டிருக்கிறது. இதனால் இக் கோபுரம் எச்சேதமும் இன்றி தப்பியுள்ளது என்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இச் செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் சன் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதனை அதிர்வு இணையம் தனது வாசகர்களுக்காக மொழிபெயர்ப்புச் செய்துள்ளது.

இலங்கை அரசை ஒருபோது நம்பமுடியாது: நா.ம.உ ஸ்ரீதரன் பேட்டி !

இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை என்பது எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர் ப.ஸ்ரீதரன் அவர்கள் . இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்களும், அவை பாதியில் முறிந்துபோயுள்ளது தொடர்பாகவும் அவர் மனம் திறந்து தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். இலங்கை அரசை ஒருபோதும் நம்பமுடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர் மூன்றாம் நாடு ஒன்றின் மத்தியஸ்தம் தேவை என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை அரசு இதயசுத்தியோடு தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறு ஒருபோதும் இருந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் ஏதாவது ஒரு நாடு இலங்கை அரசு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் எனவும் குறிப்பிட்ட ஸ்ரீதரன் அவர்கள் நாளை லண்டன் ஹரோ பகுதியியில் நடைபெறவுள்ள மக்கள் கலந்துரையாடல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். நாளை மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் ப.ஸ்ரீதரன் உட்பட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மக்கள் அனைவரும் அங்கே வந்து தமது கலந்துரையாடலில் ஈடுபடலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க! அம்மா இன்னொரு எம்.ஜி.ஆர். தான்!


வடுக்களையும் வருத்தங்களையும் மட்டுமே சுமந்தவர்களின் முகங்களில் சட்டென வசந்தக் காற்று வீசினால் எப்படி இருக்கும்? சென்னை உயர் நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தபோது அப்படித்தான் இருந்தது.

நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா இருவரும் எட்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை என அறிவித்ததும், நீதிமன்ற வளாகமே ஆரவாரித்தது. சீனியர் வழக்கறிஞர்கள் சிலர், ''இது நீதிமன்றம் என்பதை மறந்துவிட வேண்டாம்!'' எனக் கோபம் காட்ட, நீதிபதிகளே 'இது மக்களின் உணர்வு’ எனக் கை காட்டி அந்த ஆரவாரத்தை ரசித்தார்கள்.

வெற்றி முழக்கம், இனிப்புப் பகிர்வு, நன்றி அறிவிப்புகள் எனத் தமிழகம் முழுக்க ஆனந்தக் கொண்டாட்டம்.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு, மரண வாசலில் திக்திக் இதயத்தோடு நிற்கும் பேரறிவாளன்,முருகன், சாந்தன் மூவருக்கும் மறுஜென்ம நிறைவைக் கொடுத்திருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, இந்த இடைக்காலத் தீர்ப்பு அறிவிப்பை முதலில் பேரறிவாளனிடம் சொல்லி இருக்கிறார். 'நிச்சயம் தடை கிடைச்சிடும்னு நம்பிக்கை இருந்துச்சு. உடனே, இதை முருகன், சாந்தன்கிட்டயும் சொல்லுங்க சார்!’ எனத் துள்ளி இருக்கிறார் அறிவு.

9-ம் தேதி தூக்கு என நாள் குறிக்கப்பட்டதுமே, மூன்று பேரும் உயர் பாதுகாப்புத் தொகுதியில் தனித் தனியாக அடைக்கப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். திடீரென 'ஏ கிளாஸ்’ உணவு மூவருக்கும் வழங்கப்பட்டது. மெடிக்கல் செக்கப், ஒயிட் அண்ட் ஒயிட் உடை எனத் தூக்குத் தண்டனையை நினைவுபடுத்தும் அனைத்து வேலைகளும் நடந்தபடியே இருந்தன.

''நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?'' என்கிற கேள்வியும் சிறைத் துறை வழக்கப்படி கேட்கப்பட்டது.

பேரறிவாளன் தனது தாய் அற்புதத்தம்மாளிடம் உடலை ஒப்படைக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.

முருகனும் சாந்தனும் 'எங்களுக்காக எல்லாவிதப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் சீமான் அண்ணனிடம் ஒப்படையுங்கள்’ என எழுதிக் கொடுத்தார்கள்.

போர்க் குற்றத்தைக் கண்டித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் நிச்சயம் நம் விஷயத்தில் தலையிட்டு, நல்ல தீர்வைக் கொடுப்பார்!'' என தூக்குத் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பேரறிவாளன் சொல்லி வந்தாராம்.

இடைக்காலத் தடையோடு சட்டமன்றத்தில் தூக்குத் தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் தீர்மானமும் இயற்றப்பட, ''ஈழத்துக்கு எம்.ஜி.ஆர். எப்படி உதவினாரோ, அந்த அளவுக்கு முதல்வர் அம்மாவும் உதவுறாங்க. இன்னொரு எம்.ஜி.ஆர்-னா அது அம்மாதான்!'' எனக் கொண்டாடி இருக்கிறார் முருகன். சட்ட மன்றத் தீர்மானம், இடைக்காலத் தடை குறித்து சொல்லப்பட்ட பிறகுதான், சாந்தனின் முகத்தில் கொஞ்சம் புன்னகை.

நீதிமன்றத்தில் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் வாதாடி முடித்த பிறகு வைகோ எழுந்தார். ''மூன்று பேரையும் தனிமைச் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்!'' எனச் சொல்ல, அதற்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ம.தி.மு.க. சட்டப் பிரிவுச் செயலாளர் தேவதாஸ் மூலமாக, வழக்கறிஞர்கள் காலின் கான்சிவேல்ஸ், சபரீசன் ஆகியோரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார் வைகோ.

திருவள்ளூர் மாவட்டச் செயலாளரான செங்குட்டுவன், வழக்கறிஞர்கள் மொகித் சவுத்ரி, பாரி, மலர் ஆகியோரை சிறைக்கு அழைத்துப் போனார். பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் சந்தித்த வழக்கறிஞர்கள், ''தூக்குத் தண்டனைக்கு எதிரான விஷயமாகத்தான் இந்த வழக்கைக் கையில் எடுத்தோம். ஆனால், நீதிமன்றத்திலும் சாலைகளிலும் திரண்டு இருந்த மக்களின் ஏகோபித்த உணர்வைப் பார்த்து சிலிர்த்துப்போனோம்.

இந்த மூவருடைய தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலமே கைகோத்து நிற்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வழக்கில் ஆஜரானதற்காகப் பெருமிதப்படுகிறோம்!'' எனச் சொல்ல, மூவருக்கும் கண் கலங்கிவிட்டது.

சிறைக்குள் மூவருடைய மனநிலையும் எப்படி இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

தூக்கு நாள் நெருங்கியதை நினைத்து, அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், தூக்குத் தண்டனைக்கான சம்பிரதாயங்களை நாங்கள் நடத்தியபோது, பதற்றமானார்கள். இதேபோன்ற சம்பிரதாயங்கள் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோதே ஒரு முறை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் செங்கொடி தீக்குளித்து இறந்த செய்தி கேட்டு மூவரும் உடைந்துபோனார்கள். அந்தக் குடும்பத்துக்கு நாங்க என்ன செய்யப்போறோம் எனக் கலங்கிய பேரறிவாளனைத் தேற்றவே முடியவில்லை.

முருகனும் சாந்தனும், எங்களுக்காக இனியும் யாரும் சாக வேண்டாம். சீக்கிரமே எங்க கதையை முடிச்சிடுங்க சார்... எங்களுக்காக தீக்குளிச்ச தங்கச்சியோட முகத்தைக்கூட பார்க்க முடியாமப்போச்சே எனப் புலம்பினார்கள்.

இடைக்காலத் தீர்ப்பு, சட்டமன்றத் தீர்மானம் என இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்தும், செங்கொடி மரணத்தால் அந்த மூவரும் பெரிதாக மகிழவில்லை. பேரறிவாளனும் முருகனும் 'நன்றி தாயே’ என உரக்கக் குரல் எழுப்பினார்கள்.

மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். திங்கட்கிழமை தங்களை சந்திக்க வரும் சீமான் மூலமாக கடிதத்தை முதல்வர் கையில் சேர்க்கப்போகிறார்கள். நன்றிகளால் அந்தக் கடிதம் நிரம்பி இருக்கிறது! என்றார்கள் சிறைத் துறை அதிகாரிகள் சிலர்.

மூவரையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலர், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 20 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தனிமைச் சிறையின் கொடுமையை முன்னுதாரணமாகக் காட்டியே குற்றவாளிகளுக்குத் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன.

எட்டு வார காலத் தடைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வலியுறுத்துவோம். அதேபோல், ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் ரொபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 20 வருடங்களாக உள்ளே இருக்கிறார்கள். அப்படி என்றால், ஆயுள் தண்டனையின் கால அளவு எத்தனை வருடங்கள்? அடுத்த கட்ட சட்டப் போராட்டங்களில் இத்தகைய வாதங்களையும் எடுத்துவைப்போம்! என்கிறார்கள்.

இதற்கிடையில் இன்னும் சில உணர்வாளர்களோ, ''செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில், சிறைகளில் இருந்து யார் யாரை எல்லாம் விடுவிக்கலாம் என்கிற ஆய்வு நடக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களின் பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.

போர்க் குற்றத்தை எதிர்த்தும், தூக்குத் தண்டனையைக் குறைக்கச் சொல்லியும் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனையைக் கடந்தும் சிறையில் வாடுபவர்களை மீட்டால், அது காலத்துக்கும் மறவாத சாதனையாக இருக்கும்! என்கிறார்கள் நம்பிக்கையோடு.

ஆச்சரிய மாற்றங்கள் தொடரும் என நம்புவோம்!

ஜூனியர் விகடன்

பிள்ளைகளின் மிருதங்க, பரத நாட்டிய அரங்கேற்ற மண்டபத்தில் தந்தை மாரடைப்பால் மரணம்! கனடாவில் சம்பவம்


தனயனின் மிருதங்க வாசிப்பில் வியந்து மனம் மகிழ்ந்திருந்த தந்தையார், மாரடைப்பால் கலா மண்டபம் ஒன்றில் மாண்ட, துயரம் நிறைந்த சம்பவம் கடந்த வாரம் கனடாவில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி, மாலை மறைந்து இருள் படரும் இரவு. ஸ்காபுறொ புறொகிறஸ் வீதியில் அமைந்திருக்கின்ற சீனக் கலாச்சார மண்டபம் ரசிகர்கள் கூட்டத்தால் நிறைந்து வழிகின்றது.

திரு. திருமதி கதிர்காந்தன் தம்பதிகள் பெற்றெடுத்து அன்புச் செல்வங்கள் துசியந்தனின் மிருதங்க அரகேற்றமும், அவரது சகோதரி சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றமும் மேடையேறும் இரட்டை அரங்கேற்றத்தால் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த கலைச்செல்வங்களைப் பெற்றெடுத்த பெற்றோருக்கோ அதைவிடஅதிக மகிழ்ச்சி..

வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவன் துசியந்தனின் மிருதங்க அரங்கேற்றம் இனிதே நிறைவு பெற்று அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்ற துசியந்தன் மகிழ்ந்து நிற்க மேடையில் தோன்றிய கதிர்காந்தனும் அவரது துணைவியாரும் அனைத்து கலைஞர்களையும் அன்பளிப்புக்கள் வழங்கி பாராட்டுகின்றனர்.

மேடையில் மகிழ்ச்சி பொங்க நின்ற கதிர்காந்தன் மீண்டும் மண்டபத்தின் நான்கு திசைகளிலும் மகிழ்ச்சியுடன் நடமாடியபடி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சமூகமளித்தமைக்காக நன்றி கூறுகின்றார்.

மேடையில் அவரது இனிய புதல்வியும் ஸ்ரீமதி பத்மினி ஆனந்தின் மாணவியுமாகிய சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆரம்பமாகின்றது.

மண்டபத்தின் முன்பகுதியில் நின்ற கதிர்காந்தன் மேடையின் பக்கத்தே செல்லுகின்றார். எங்கிருந்து காலன் அங்கு வந்து அவரைத் தாக்கினானோ தெரியாது.

தீடீரென நெஞ்சைப் பிடித்தபடி அருகில் நின்ற கலைஞர் கதிர் துரைசிங்கத்திடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறுகின்றார்.

உடனே அவரது தோற்றத்தை நன்கு அவதானித்த கதிர் துரைசிங்கம் “அம்புலன்ஸ்” மருத்துவ வண்டிக்கு அழைப்பு விடுக்கும்படி நண்பர்களிடம் வேண்டினார்.

இதற்கிடையில் மாரடைப்பால் தாக்கமடைந்த கதிர்காந்தன் நிலத்தில் சரிய அங்கு “அம்புலன்ஸ்” வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் அளித்த முதலுதவியினால் கூட கதிர்காந்தனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

தனது இனிய புத்திரச் செல்வங்களின் இரட்டை அரங்கேற்றத்தை முழுமையாக கண்டு களிக்க முடியாத ஒரு பாவியாக அவர் இடையில் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்.

கலையேற்றத்தால் களிப்புற்றிருந்த அனைவரும் அன்று கதிகலங்கிப் போனார்கள். கனடாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் செய்திகள் பரவியது. அனைவரும் பதறினார்கள்.

மறைந்த அந்த கலா ரசிகனி;ன் இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் ஸ்காபுறோவில் நடைபெற்றன. அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக.