Facebook இன் அழிவு நாள் நவம்பர் 5 – திருடர் குழு சபதம்


Anonymous குழுவினர் சிரியாவின் பாதுகாப்புத் தளத்தினைத் தாம்தான் திருடியதாக உரிமை கோரியுள்ளனர். இதன் சில உறுப்பினர்கள் அடுத்ததாக Facebook இனையும் அழிக்க விரும்புகின்றனர் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுவாக உங்களது நண்பனின் வேண்டுதலை Anonymous குழு ஏற்றுக்கொள்ளாது.

அரசியல்ரீதியான இணையத்தளத் திருட்டுக்களையும் தாக்குதல்களையும் செய்துவரும் இதன் மறைமுக உறுப்பினர்கள் தற்போது Facebook சமூக இணையத்தளத்தினை இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்த இணையத்தளம், சமூகத்தின் தனிநபர் தகவல்களைப் பிழையாகப் பயன்படுத்துவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘நீங்கள் மிகவும் விரும்பும் உங்களது தொடர்பாடல் ஊடகம் அழிக்கப்படும்’ என அதன் பேச்சாளர் YouTube காணொளியில் தெரிவித்துள்ளார்.

இது யூலை 16 இல்தான் காட்டப்பட்டது. எனினும் இந்த வாரந்தான் இது சூடுபிடித்துப் பரவலாகச் சுழலத்தொடங்கியுள்ளது.

பேச்சாளர் மேலும், ‘Facebook இல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயற்பாடும் Facebook இலேயே இருப்பதுடன் தனிநபர் விருப்பிற்கு மாறாக உங்களது கணக்கினை அழிப்பதும் முடியாத காரியமாகிவிடும்.

எனவும் Facebook தனது பயனாளர் தகவல்களை அரச நிறுவனங்களுக்குக் கொடுக்கின்றது எனவும் அவை பின்னர் மக்களை வேவு பார்க்கப் பயன்படுத்துகின்றன’ எனவும் கூறினார்.

ஒரு Facebook பேச்சாளர் இந்தக் கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துப் பதிலளித்திருந்தார்.

Facebook இனை முடக்கும் நடவடிக்கை நாளாக நவம்பர் 5 உள்ளது. இது கரிமருந்துத் திட்டத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் Guy Fawkes Day எனும் நாளாகும்.

இந்நாளில்தான் 1605ஆம் ஆண்டில் Fawkes என்பவர் பிரித்தானியப் பிரபுக்களின் வீடுகளில் வெடிமருந்துகளை வைத்து வெடிக்கவைத்தனர்.

Anonymous குழுவின் பொதுவான தாக்குதலாக ஒரு தளத்தினைத் திறக்க மறுக்கும் செய்தியை அனுப்புவதே உள்ளது. ஓர் இணையத்தளத்திற்குள் செல்ல மக்கள் பல தடவைகள் அதைத் திறக்கின்றனர்.

இது மோசமாக அல்லது நெரிசலாகப் போகும்பட்சத்தில் அதன் இணையத் தொடர்பினையே அது நிறுத்திவிடுகின்றது.

ஆனால் எல்லோராலும் விசிலடிக்குமளவிற்கு உயர்நிலையில் இருந்த விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு ஆதரவு தெரிவித்த Anonymous இன் உறுப்பினர்கள் எல்லோருக்கும் Facebook இனைத் தாக்கும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகவே உள்ளது.

இவ்வமைப்பின் குறிப்பிட்ட சில உறுப்பினர்களே facebook இனை முடக்குவதற்கு முன்னிற்கின்றனர்.

இக்குழுவின் செயற்பாடுபற்றிக் குறிப்பிடும் @GoupAnon எனும் Twitter பகுதி, எல்லா Anonymous உறுப்பினர்களும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தது.

தனியான தலைவரின்றியுள்ள இந்தக் குழுவின் ஒழுங்கமைப்பு அதிக கட்டுப்பாடுகளின்றியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் 750 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட இணையத்தளத்தினை அழிக்க அல்லது மெதுவாக்கப் போதுமான உதவியை மற்றவர்களிடமிருந்து ஒற்றுமையாகப் பெறுவார்களா என்பது சந்தேகமே.

இதே குழு டிசம்பரில்தான் ஒன்லைன் சந்தைப்படுத்தல் தளமான Amazon எனும் இன்னொரு இணைய இராட்சதனை அழிக்க முயற்சித்துத் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடங்களில் இந்த Anonymous குழு புகழ்பெற்ற இணையத்தளங்களான PayPal, Master Card, ஏனைய மற்றும் Church of Scientology போன்றவற்றைக் குழப்பியதாகப் பொறுப்பேற்றிருந்தது.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment