Friday, July 8, 2011

உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்! இந்த காணொளியை காண்க




வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் ">">Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdinand-dimadura என்பவர்.

ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வயிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.

தினமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வறுமையினால் மடிகிறார்கள் என நிஜத்தின் வாசகமும், கனக்கும் இசையுமாக மனதை ஸ்தம்பிக்க வைக்கிறது குறும்படம். உலகின் எல்லா பாகங்களிலும் இந்த நிமிடத்தில் நடக்கும் செயல் இது எனும் உண்மை பொசுக்குகிறது.

படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க,

பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.

மீந்து போன உணவுகளை உற்சாகத்தின் உச்சத்தில், சிரிப்பும் களிப்புமாக குழந்தைகள் உண்பதைக் காணும்போது விழிகள் நீர்சொரியவும் மறந்து உறைந்து போகின்றன என்பதே உண்மை.

வறுமை வறுமை என பேசிப் பேசி அந்த வார்த்தையின் வீரியமே நீர்த்துப் போய்விட்ட இன்றைய சமூகச் சூழலில் வறுமையின் வீரியத்தை ஆணி அடித்தார் போல சொல்கிறது இந்தக் குறும்படம்.

ஊடகங்களில் இத்தகைய குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு உலகின் ஒட்டு மொத்த வீடுகளுக்குள்ளும் சென்று சேரவேண்டும். கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நிச்சயம் பலருடைய மனித நேயக் கதவுகளை வலுக்கட்டாயமாய்த் திறக்கும் என்பதில் அய்யமில்லை

நயன்தாராவின் இறுதி படப்பிடிப்பு(வீடியோ இணைப்பு)

நயன்தாரா தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக தகவல் வந்துக்கொண்டிருந்தன. அதனை தொடர்ந்து சீதையாக நடித்துக்கொண்டிருந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போது ஆழ்ந்த துயரத்துடன் அனைவரிடமிருந்து விடைப்பெற்றார்.
http://www.youtube.com/watch?v=lQmT8YO3TZs&feature=player_embedded

கட்டிட சுவற்றில் எந்த பிடியும் இல்லாமல் நிற்க்கும் வினோத மனிதர் (வீடியோ இணைப்பு)

ஜெர்மனை சேர்ந்த ohan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.
http://www.youtube.com/watch?v=k-qq2KcUo40&feature=player_embedded#at=38
ohan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் சுவரில் இருப்பது இவருடைய உண்மையான கை அல்ல. உண்மையான கை ஆடைக்கு உள்ளே உள்ளது.


Tuesday, July 5, 2011

பேஸ் புக் மூலம் தமிழர்களை ஏமாற்றி 140 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ். யுவதி!


வெளிநாடுகளில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார்.

இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார்.

இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார்.


அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை. பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.
காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.

ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார்.

பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார்.
சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு (Commercial Bank A/C No.: 8126000481) ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.


மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது.
யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன்.

யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.

தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.

இம்மோசடிகள் குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று உள்ளன. இம்மோசடிகள் குறித்த பூரண தகவல்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர்.



அத்துடன் ஏமாற்றுப் பேர்வழிகளான யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரின் நடவடிக்கைகளை மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றார்கள். இதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் நாடுகளில் வழக்கு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள். வெளிநாட்டு நீதிமன்றங்களின் பிடியாணை உத்தரவுகள் மூலம் சர்வதேச பொலிஸாரைக் கொண்டு யுவதி, ஊடகவியலாளர் ஆகியோரைக் கைது செய்கின்றமை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகின்றார்கள். (இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்டவர் யாராவது இருந்தால் எமது தொலைபேசி இலக்கத்திற்கு உடன் தொடர்பு கொள்ளவும் 00447917870832, info@tamilcnn.com )


மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கிக் கணக்கு இலக்கம் :- 8126000481
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் :- 0094778200114, 0094772398030
மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கைப் கணக்கு முகவரிகள் :- madhu, karthika


2 ஆம் இணைப்பு...

இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இலங்கையில் இருந்துகொண்டு தங்களை ஊடகவியலாளர்கள்/ வானொலி அறிவிப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு திரியும் சில இளைஞர்களைக் கொண்ட குழுவினரும் ஒரு தேர்ந்த மாபியா கும்பல் போல செயல்பட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது...

இவர்கள் தாங்கள் வேலை செய்யும் ஊடக நிறுவனங்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது...

இந்தச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து விபரங்கள் படங்கள் மற்றும் தகவல்களுடன் தமிழ் சி.என்.என் வசம் உள்ளது... தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் வெளிவரும்...


திருக்குறள் -

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கூடும் நோய். - குறள் : 360 -

பொழிப்பு :- காமஆசை, கோபம், அறியாமை ஆகிய மூன்றையும் பெயர் கூட இல்லாமல் ஒழித்து விட்டால் துன்பங்களும் இல்லை.

பேஸ்புக் கின் வீடியோ செட்டிங் : புதனன்று வெளியீடு


சமூகவலையமைப்பான 'பேஸ்புக்' எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.

'பேஸ்புக்' தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், 'ஸ்கைப் ' 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

'ஸ்கைப்'பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேமாதம் கொள்வனவு செய்திருந்தது.

இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் 'கூகுள் +' என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது.