Tuesday, June 7, 2011

நான் கண்ட வரலாறு காணாத சோகம் கதையல்ல அனுபவம்.............




ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் நாங்கள் அனுபவித்த துன்பங்கள்.............

12.08.2008 புத்துவெட்டுவானில் எங்களுக்கு அருகில் ஷெல் வீழ்ந்து வெடித்தஹில் எல்லோரும் இடம் பெயரத் தொடங்கிவிட்டார்கள்.எங்களருகில் தம்பி விக்கியும் இல்லை அவனை தொடர்பு கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலை.அப்பாவிடம் கடிதம் கொடுத்து பின் நான் நேரில் சென்று விக்கியை விடுப்பில் விடுமாறு கேட்டு பின் இரவு 12மணியளவில் தம்பி விக்கி உழவு இயந்திரம் ஒன்று கொண்டு வந்தான்.
அடுத்த நாள் நாங்கள் இடம் பெயர்ந்து கனகாம்பிகை குளத்திற்கு வந்து சேர்ந்தோம்.நல்ல மாமரச் சோலை.இரண்டு நாள் மரத்தடியில் எங்கள் பொழுது கழிந்தது.வீடு போட்டுக் கொண்டிருக்கும் போதே நல்ல மழை இயற்கையும் எம்மை விட்டு வைக்கவில்லை.
விக்கி எங்களுடன் 10 நாள் வந்து நின்றான்.பின்
விக்கி போகும் போது 6000 ரூபாவிற்கு மணிக்கூடு வாங்கி கொடுத்தென்.ஒரு நாள் திடீரென இரவு 10மணி இருக்கும் விக்கி வந்து எங்களை எழுப்பி வட்டக்கச்சியில் இருந்து வருவதாக சொன்னன்.அம்மா மா குழைத்து தேத்தண்ணியும் வைப்பம் என்று நினைக்கும் போது கிபீர் பயங்கர இறைச்சலுடன் வந்து பரா குண்டு போட்டான் அதிட வெளிச்சம் இரவை பகல் போலக்கியது.நாங்கள் ஒரு நாளும் காணாத விடயம் அது.
அந்த நேரம் அம்மா லாம்பு வெளிச்சத்துக்கு இங்கயும் குண்டு போடுவான் என்று சொல்லி லாம்பை நூக்க சொன்னா.பின் அப்பா பங்கருக்குள்ள நின்று பீடி குடிக்க அந்த வெளிச்ச்ம் அவனுக்கு தெரிஞ்சால் குண்டு இங்க தான் போடுவான் எண்டு அப்பாவை பீடி குடிக்க வேண்டாம் என்று சொன்னா.இத்தனைக்கும் நாங்கள் இருந்த இடம் சோலைக்காணி இதை எல்லாம் பார்த்த விக்கிக்கும் எனக்கும் மாமாவுக்கும் சிரிப்பு ந்றல் அடக்க முடியாத சிரிப்பு அதை சொல்ல முடியாது...பின் 1/2 மணி நேரத்துக்கு பின் கிபீர் போய்விட்டது.அதற்கு பின் அம்மா விக்கிக்கு கொடுக்கிறதை கொடுத்து விக்கியும் பொய்விட்டன்.
மறு நாள் ரூபன் மாமா இறந்துட்டார் என்ற செய்தி எங்களுக்கு தாங்க முடியாமல் இருந்தது.ஆனால் விக்கி மாமாவின் மரண சடங்கைல் கலந்து கொள்ள முடியவில்லை.அது அவனுக்கு சரியான கவலை ஒரு நாளும் சிந்திக்காத சிந்தனை அன்றுதான் வந்ததாக எனக்கு கூறினான்.
நான் இதையெல்லம் தூக்கி எறிந்து போட்டு ஓடட்டோ என நினைத்தனாம்.பின் நண்டுக்கறியும் மட்டு இறைச்சியும் சப்பிட்டு விட்டு கிணிக்கோழி ஒன்று பிடித்துக் கொண்டு போனான்.ரூபன் மாமாவிற்கு பட்ட குண்டு எனக்கு பட்டிருக்கலாம் என்று சொன்னான் எனக்கு ஒறு கணம் உயிர் நின்ற மாதிரி இருந்தது.

தொடரும்............

No comments:

Post a Comment