Wednesday, April 6, 2011

ஆண்களின் காதல் காமத்தை நோக்கியது பெண்களின் காமம் காதலை நோக்கியது


ஆண்களும் பெண்களும் முத்தமிடுதலின் வேறுபாடுகள் பற்றி நியூயார்க் நகர பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் சுவாரஸ்யமான பல முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. அதாவது முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பது அவற்றில் ஒன்று. பெண்கள் முத்தத்தை தங்கள் இணை வாழ்க்கை உறவின் ஒரு அங்கமாகக் கருதுகின்றனர்.

காதலை அர்த்தப்படுத்திக் கொள்ளவும், தங்கள் நீண்டகால உறவினை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அதன் நிலைப்பாட்டை சரி செய்து கொள்ளவும் முத்தத்தையே விரும்புகின்றனராம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முத்தம் என்பது நீண்ட கால உறவினைப் புதுப்பிக்க பயன்படும் ஒன்றாக இல்லை. காதல் உறவின் போது முத்தம் ஒரு கீ கொடுக்க பயன்படுகிறது. ஆசை அதிகரிக்கும் போது ஒரு அடையாளமாக வெளிப்படுகிறது.


ஆண்களும் பெண்களும் முத்தத்தை மிகவும் ரசிக்கிறார்கள் என்றாலும் பெண்களே அதற்கு ஒரு முன்னுரிமை வழங்குகிறார்கள். முத்தமே இல்லாத உடலுறவைக் கூட ஆண்களால் நிகழ்த்தி விட முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. இணை வாழ்க்கை நாட்கள் நீள நீள முத்தத்தின் முக்கியத்துவம் ஆண்களிடம் குறைந்து விடுகிறது. ஆனால் பெண்களிடம் அது உயிரோட்டமாய் இருக்கிறது. தாமதம் வேண்டாம், தயக்கம் வேண்டாம். உங்கள் துணையின் நேசத்தை அவ்வப்போது முத்தத்தால் அங்கீகரியுங்கள்.

1 comment:

  1. நல்ல பகுந்தாய்ந்த பதிவு!

    ReplyDelete