Sunday, March 13, 2011

ஆபத்தில் உதவும் கூகிள் - ஜப்பானில் காணமற்போனோரைக் கண்டுபிடிக்க உதவுகிறது!

ஜப்பானில் நடைபெற்றிருக்கும் சுனாமி அனர்த்தத்தின் மீட்புப் பணிகளில் கூகிளும் தன்னை இணைத்துள்ளமை, இணையம் இன்றைய வாழ்வில் எத்துணை தூரம் சிறப்பாகப் பங்காற்ற முடியும்

என்பதற்கு மற்றுமொரு எடுத்தக்காட்டாக அமைகிறது.


பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், காணமற் போயிருப்போர், இடம்மாறிப் பிரிந்திருப்பவர்கள் குறித்த விபரங்களை இணையத்தில் கூகிளால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Person Finder: 2011 Japan Earthquake எனும் தளத்தில் கொடுத்து, தேடுதல் மூலமும், தொகுப்பதன் மூலமும், காணமற்போளனவர்களை மற்றும் பிரிந்தவர்களைக் கண்டுகொள்ள உதவுகிறது.

இணையத்தில் இப்பக்கம் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்திற்குள் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் விபரங்களைப் பதிவு செய்துள்ளனர். அதுபோலவே தங்கள் உறவுகளைக் கண்டுபிடித்தும் உள்ளனர்.

ஆபத்தில் உதவும் நண்பனாய் கூகிள் வடிவமைத்திருக்கும் இந்த இணைப்பக்கத்தின் மூலம் நீங்களும் உங்கள் உறவு மற்றும் நன்பர்கள் நிலை அறிய வேண்டின் கீழ்காணும் இணைப்பினை அழுத்திச் சென்று, தேடும் நபர் குறித்த விபரங்களைக் கொடுத்துத் தேடுங்கள். அல்லது இத்தகைய உதவி தேவைப்படுவோருக்கு இந்த இணைப்பினைக் கொடுத்து உதவுங்கள்.

http://japan.person-finder.appspot.com/?lang=en

No comments:

Post a Comment