Thursday, March 31, 2011

ஆண் - பெண் இருவரும் செக்ஸ்சில் உச்சத்தையடையும் வயது...?


மூளை

இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.

கண்கள்

ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது.

காதுகள்

வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப் பொறுத்தவரை 25 சதவீதம். அதுவே, 70 முதல் 80 வயதானவர்களில் செவித்திறன் பாதிக்கப்படுவோர் 75 சதவீதம் பேர். புலன்கள் சுவையறியும் திறனும், நுகரும் திறனும் 60 வயதுகளின் ஆரம்பத்தில் குன்ற ஆரம்பித்து விடுகின்றன. 70 முதல் 80 வயதுக்கு உள்பட்ட 30 சதவீதம் பேருக்கு புலன் திறன் குறைபாடு பிரச்சினை இருக்கிறது.

தோல்

20 வயது முதலே தோலுக்கு `வயதாக’த் தொடங்கி விடுகிறது. ஆனால் 40 வயதுக்கு மேல்தான் அது `பளிச்’செனத் தெரிய ஆரம்பிக்கிறது.

இதயம்

வயது கூடுவதற்கு ஏற்ப மாரடைப்பு அபாயமும் கூடுகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற் பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த ஆபத்து அதிகம்.

உயரம்

80 வயதை அடையும்போது நாம் நம் உயரத்தில் 2 அங்குலத்தை இழக்கிறோம். நமது முது கெலும்பு முன்னோக்கி வளைவதால் இந்நிலை. முதுகெலும்பு இணைப்புகளுக்கு இடையே ஏற்படுமë அழுத்தத்தால் இந்த வளைவு ஏற்படுகிறது.

பிராஸ்டேட்

20 முதல் 90-க்கு இடைப்பட்ட வயதில் இதன் எடை இரு மடங்காகிறது. 50 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு `பிராஸ்டேட் கேன்சர்’ ஏற்படும் அபாயம் அதிகம்.

கல்லீரல்

30-க்கும் 90-க்கும் இடைப்பட்ட வயதில் நாம் நம் கல்லீரலின் மூன்றில் ஒரு பங்கு எடையை இழக்கிறோம்.

செக்சின் உச்சம்

செக்ஸ் செயல்பாட்டை பொறுத்தவரை பெண்கள் 35 வயதில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் 18 வயதிலேயே உச்சத்தை எட்டிவிடுகிறார்கள். டெஸ்ட்டோடிரோன் சுரப்பு அந்த வயதில் உச்சத்தில் இருப்பதுதான் காரணம். ஹார்மோன் சுரப்பு உச்சத்தில் இருந்தால் செக்ஸ் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆண்கள் `வயாக்ரா’ போன்ற சக்தி தேடுவது 41 வயதில்.

தசைகள்

தசை இழப்பு 30 வயதுகளில் தொடங்குகிறது. தினசரி உடற்பயிற்சி செய்யும்போது 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு 22 சதவீதமும், அதே வயதில் ஆண்களுக்கு 23 சதவீதமும் தசை இழப்பு ஏற்படுகிறது.

இணைப்புகள்

வழக்கமான இயக்கம் நமது இணைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விளையாட்டு போன்ற செயல்பாடுகளால் அழுத்தம் அதிகரிக்கும்போது அதை சாதாரணமாக 40 முதல் 50 வயதில் பாதிப்படையத் தொடங்குகின்றன. இது இணைப்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். எலும்புச் சிதைவு நோயின் துவக்கமாகவும் அமையலாம்.

எலும்புகள்

இவை 50 வயதில் அடர்த்தியை இழக்கத் தொடங்குகின்றன. இது அதிக பட்சமான எலும் புச்சிதைவு நோய் அபாயத்தையும், எளிதில் விரிசல்கள் ஏற்படுமë அபாயத்தையும் உருவாக்கலாம்.

தண்டுவடம்

அறுபது வயதாகும் நிலையில் தண்டுவடத்தின் செல்கள் வீழ்ச்சியடையத் தொடங்கு கின்றன. இதனால் தொடுதல் உணர்வில் பாதிப்பு ஏற்படுகிறது

No comments:

Post a Comment