Saturday, March 5, 2011

எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை!


வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது. யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment