Thursday, March 31, 2011

பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (வீடியோ இணைப்பு)


பிரான்ஸ் நாட்டின் சிலந்தி மனிதன் (Spider Man) என அழைக்கப்படும் அலயின் ரொபேர்ட் உலகின் உயரமான கட்டிடமாகக் கருதப்படும் டுபாயின் பர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

குறித்த கட்டிடத்தின் உயரம் 828 மீற்றர்களாகும். இதில் ஏறுவதற்கு இவருக்கு தேவைப்பட்டது வெறும் 6 மணித்தியாலங்கள் மட்டுமே .

ரொபேர்ட் உலகிலுள்ள அதி உயரமான 80 கட்டிடங்களில் இதுவரை ஏறியுள்ளார்.

சிக்காகோவின் சியர்ஸ் மற்றும் தாய்வானில் உள்ள தாய்பேய் 101 ஆகிய கட்டிடங்கள் இவர் ஏறியவற்றில் இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தனது 12 ஆவது வயதில் கட்டிடங்களில் ஏறும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பல நாடுகளில் கட்டிடங்களில் அனுமதி இன்றி ஏறியமைக்காக பல்வேறு தடவைகள் இவர் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment