Monday, March 21, 2011

ஆர்டிக் பனிகட்டிகளுக்கு அடியில் பிரமாண்ட உயிரினங்கள்


ஆர்டிக் பனிக்கடல் பகுதிகளுக்கு அடியில் பிரமாண்ட உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பனித்துருவத்திற்கு கீழே வேறு ஒரு புதிய உலகம் இருப்பதை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு பல ஆச்சரியமான, அற்புதமான எடுதிதுக்காட்டுகின்றன.

கடல்சார் உயிரின் ஆய்வாளர் அலெக்சாண்டர் செமேனோவ் ஆர்டிக் பகுதிக்கு கீழே உள்ள உயிரினங்கள் 2 ஆண்டுகள் ஆய்வு செய்தார். மிக அபாயகரமானச் சூழலில், புறக்கதிர்கள், பின் தங்கிய வொயிட் சீ பயாலஜிகல் நிலையத்தில் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார்.


ஆர்டிக் கடல் பனிக்கட்டியை துளைத்து தண்ணீருக்கு அடியில் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் அந்த ஆய்வினை மேற்கொண்டார்.

ஆர்டிக் கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்ட உயிரினங்கள் இதற்கு முன்னர் பார்த்த உயிரினங்கள் ஒத்ததாக இல்லை என அலெக்சாண்டர் கூறினார். நீருக்கு அடியில் முதன்முறையாக தற்போது பயனளித்தபோது, வேற்று கிரகத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

பனிக்கடலுக்கு அடியே காணப்பட்ட உயிரினங்கள் பெரும் ஆச்சரியம் அளிக்க கூடியவையாக இருந்தன. சீ பட்டர்பிளை, சீ ஏஞ்சல், மணல் புழுக்கள், கடல் புழுக்கள் என பல, வண்ணமயமான உயிரினங்களை அவர் படம் பிடித்துள்ளார்.

வொயிட் சீ பகுதியில் இந்தப் படங்களை அலெக்சாண்டர் படம் பிடித்துள்ளார். உலகில், உணரப்படாத பகுதியாக இந்த இடம் உள்ளது.

வட கிழக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் இந்த வொயிட் சீ உள்ளது. டென்மார்க்கை காட்டிலும் இரு மடங்கு அளவு உள்ளதாக இப்பகுதி உள்ளது.

பளிங்கு போல தூய்மையான இந்த தண்ணீர் பகுதி நீர் மூழ்கி வீரர்களை கவர்ந்துள்ளது. இதனால் தண்ணீருக்கு அடியில் 40 மீட்டர் ஆழத்தில் உள்ள அதிசயங்களை காண அவர்கள் முனைந்துள்ளனர்.

No comments:

Post a Comment