Thursday, March 3, 2011

ஜாலி திருட்டால் வந்த மனநோய்

கிளெப்டோமேனியா இது ஒரு மனநோய். நாம் திருடுகிறோம் என்று கூட தெரியாது.

ஆனால், நம்மை அறியாமல், கடைக்குச் சென்றால் எதையாவது எடுத்து கையில் வைத்துக்கொள்வோம். திருடவே இல்லை என்று அடம் பிடிப்போம். இது திடீரென ஏற்படுவதில்லை. ஜாலிக்காக ‘சுட்டு’ பழக்கப்பட்ட சிலருக்கு, இது விடமுடியாத பழக்கமாக தொற்றிக்கொள்கிறது.

அதன் உச்சக்கட்டம்தான் கிளெப்டோமேனியா. அமெரிக்காவில் 1960களில்தான் இப்படி ஒரு மனநோய் கண்டுபிடிக்கப்பட்டது. எங்கு போனாலும், இத்தகைய ஆசாமிகள் எதையாவது எடுத்து கையில் வைத்துக்கொள்வர். திருப்பி வைத்து விடுவார் என்று நினைத்தால் பையில் போட்டுச் சென்று விடுவர். தடுத்துக் கேட்டால், ‘சாரி’ என்று சொல்லி திருப்பித் தருவர். சில ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம்... சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற குழுவினர், இந்தியா திரும்ப விமானம் தாமதம் ஆனதால், விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது டூட்டி ஃப்ரீ ஷாப்பிங் செய்ய சிலர் சென்றனர். கடைகளை வலம் வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி, கடையை விட்டு வெளியே வரும்போது மடக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு பேனாவைக் கண்டுபிடித்து, ‘நீங்கள் இதைத் திருடியிருக்கிறீர்கள்; அபராதம் கட்ட வேண்டும்’ என்று விமான நிலைய பாதுகாவலர்கள் அழைத்துச்சென்று விட்டனர். அலாரம், கேமரா என டூட்டி ஃப்ரீ ஷாப்பிங் சென்டர்களில் பாதுகாப்பு பலமாக இருக்கும். அதில்தான் இந்த ‘கிளெப்டோமேனியா’ பெண்மணியும் சிக்கினார். எவ்வளவோ மன்றாடிப் பார்த்து விட்டார். சாதாரண பேனாவுக்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டுத்தான் விமானம் ஏற முடிந்தது. கிளெப்டோமேனியா என்பது கிரேக்க வார்த்தை. கிளெப்டின் என்றால் திருடுவது; மேனியா என்றால் சுயமறியா பழக்கம் என்று பொருள்.

No comments:

Post a Comment