Tuesday, March 15, 2011

சுவாரஸ்யமான அனுபவம் ஓவியா மகிழ்ச்சி


'களவாணி’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள ஓவியா, இந்த படத்தின் கன்னட, தெலுங்கு ரீமேக்கில் அதே கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதுபற்றி ஓவியா கூறியதாவது: தமிழில் ‘களவாணி’ ஹிட்டானதால், கன்னட, தெலுங்கு வாய்ப்புகள் கிடைத்தன.
கன்னடத்தில் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர் பிரதீப் ராஜா. மேலும் ஒரு மழை பாடலும் படத்தில் இருக்கிறது.

கன்னட ரசிகர்களுக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் இதே வேடத்தில் நிகிலுடன் நடிக்கிறேன்.

ஒரே வேடத்தை வெவ்வேறு மொழிகளில் செய்வதால் போரடிக்கவில்லையா என்கிறார்கள்.

இதில் ஏன் போரடிக்கப் போகிறது? ஒவ்வொரு முறையும் முதலில் நடித்ததை விட இன்னும் சிறப்பாக நடிக்க முடியும். இது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கிறது.

தமிழில், ராசு. மதுரவன் இயக்கத்தில் நடித்துள்ள ‘முத்துக்கு முத்தாக’ விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கூடை பந்து பிளேயராக நடித்துள்ளேன்.

இந்தப் படம் எனக்கு முக்கியமானது என்று கூறினார்.

No comments:

Post a Comment