Sunday, March 13, 2011

சிறீதரன் பா.உ, லங்காசிறி: ஒருமுகப்படுத்தப்பட்ட இரு தாக்குதல்கள். (படங்கள் இணைப்பு)


கடந்த வாரம் சொல்லி வைத்தாற் போல இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தன. இரண்டுமே தமிழர்களிற்கு அதிர்ச்சியை ஊட்டும் நிகழ்வுகள் தாம்.
முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பாராளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது கைக்குண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலிற்கு உட்படுத்தப்பட்டார்.இரண்டாவதாக இன்று புலம்பெயர்ந்த மக்களாலும், தாயக மக்களாலும் அதிகம் பார்க்கப்படும் இணையத் தளங்களை உள்ளடக்கிய லங்காசிறி நிறுவனத்தின் மீதான ஊடகத் தாக்குதல்.
தமிழ்த் தேசியத்தின் எழுச்சி எந்தவிதத்தில் உருவெடுத்தாலும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளை தவறமால் செய்து வரும் சிறீலங்காவின் அரசும் அதன் அடிவருடிகளும் இப்போது சாத்வீக வழிநாடும் தமிழர்களையும் குறிவைக்கின்றனர் என்பதன் அறிகுறியே இத் தாக்குதல்கள்.
அதைவிட இன்று ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையை அடைந்துள்ள வன்னி வாழ் மக்களிற்கும், ஏனைய பகுதித் தமிழர்களிற்கும் புலம்பெயர்ந்த தனிநபர்கள், ஊர்ச்சங்கங்கள் போன்றவற்றின் மூலம் உதவிகள் பெற்று அதனை அங்கே செய்து வருகின்றார்.

வன்னியை வழமையான வாழ்வியலிற்குள் கொண்டு வருவதற்கு தன்னாலான வழிகளில் முயன்று அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று வருகிறார்.

இந்த தான, தர்ம முயற்சிகள் இவர் மீதான ஓரப்பார்வையை அரச சார்புக் குழுக்கள் மற்றும் தமிழ்விரோத சக்திகள் அதிகரிக்கச் செய்திருந்தது.

இந் நிலையில் தான் கல்வி கற்ற, தான் ஆசிரியராகப் பணி புரிந்த வட்டக்கச்சி மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி மண்ணின் வீரத்தையும், அந்த மண் தந்த வரலாற்றையும், வீரர்களையும் நாம் என்றும் மறந்து விடக் கூடாது என்றும், கிளிநொச்சி துரோகம் போகும் மண்ணாக மாறக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது இவர் மீதான வெறுப்பை ஏற்படுத்தியையே கிளிநொச்சி மகாவித்தியால நிகழ்விற்கு, சொந்தப் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனைத் தவிர்த்து ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரை பிரதம விருந்தினராக அழைக்கும் அளவிற்கு அவர்களுக்கு சிறீதரன் மீது கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதேபோன்றே லங்காசிறீ. தமிழ்வின் ஊடகங்கள் கட்சிபேதமின்றி தமிழர்களிற்கு பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்ற கொள்கை உள்ள எவருடைய செய்திகளையும் வெளியிடத் தயங்குவதில்லை.

அந்தவகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் விடுதலை கூட்டமைப்பு உள்ள சகல தரப்பினரதும் செய்திகளைத் தாங்கி வரும் ஒரு தளமாக மக்கள் ஆதரவுடன் உருவெடுத்தது.

இதனால் இந்தத் தளங்களிற்கு இலங்கையிலிருந்து அதிகளவு மக்கள் பார்வையாளராக விஜயம் செய்து நாட்டு நடப்புக்களை அறியும் ஒரு மையமாக இந்த இணையத் தளங்கள் மாற்றம் பெற்றன. இது தமிழ் விரோத சக்திகளிற்கு நிச்சயமாக ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இந்நிலையிலேயே தமிழர்களிற்கு பிரச்சினை இருக்கிறது. அதற்குச் சாத்வீக வழியில் தீர்வு தேவை என்ற நிலைப்பாட்டையுடைய தாயக, புலம்பெயர்ந்த சக்திகளான சிறீதரன் பா.உ, லங்காசிறி ஊடகங்கள் மீது சமகாலத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தாக்குதல்களும் பிசுபிசுத்துப் போனாலும் இனி எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதலிற்கான சாத்தியங்கள் உண்டு என்பதையே காலம் எங்களிற்குக் காட்டி நிற்கிறது.

எத்தகைய இடர் வரினும் அதனை மக்கள் சக்தியின் துணையுடன் எதிர்கொண்டு முறியடித்து உண்மைக்காக இவ் இணையத்தள ஊடகம் உழைக்கும் என்பதை இந்த நேரத்தில் எதிர்பார்க்கிறோம்.

Vannan Kugendra
vannan.kugendra@gmail.com

No comments:

Post a Comment