Monday, March 7, 2011

வேற்றுகிரகவாசிகளின் உயிரின படிவங்கள் கண்டுபிடிப்பு




வேற்றுகிரகவாசிகளின் உயிரின படிவங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கான ஆய்வை 100 நிபுணர்கள் மேற்கொண்டனர்.

பிரபஞ்சவியல் குறித்த இதழில் விஞ்ஞானி ரிச்சர்டு ஹீவரின் ஆய்வு அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை மண்புழு போன்ற உயிரின படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

பூமிக்கு அப்பால் உருவான இந்த உயிரினம் பாக்டீரியா போன்ற உயிரினத்தை ஒத்ததாக உள்ளது. இந்த பாக்டீரியா படிமம் பூமியைச் சார்ந்தது அல்ல. வேற்று கிரகங்கள் நிலவும் பகுதியை சார்ந்ததாக இருக்கலாம் என அந்த நிபுணரின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை தவிர இதர கிரகங்களிலும் உயிரினங்கள் வாழலாம் என்பதை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. வேற்று கிரக உயிரின கண்டுபிடிப்பு குறித்து வான் இயற்பியலுக்கான ரூடி ஷீல்ட் மையப் பத்திரிக்கை ஆசிரியர் ஹார்வர்டு ஸ்மித் சோனியன் வெகுவாக புகழ்ந்துரைத்தார்.

No comments:

Post a Comment