Friday, March 18, 2011

வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இணையதளம்


வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதை விட எளிமையாக அமைந்துள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.

முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தளமே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடியந்திரம். அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம்.

வேலை வாய்ப்புக்கான் கூகுள் என்றும் சொல்லலாம். கூகுள் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் தகவல்களை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன. கூகுளில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள், ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம். அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா, பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம். கல்வித்தகுதியின் அடிப்படையிலும் தேடலை பட்டியலை தீட்டிக்கொள்ளலாம். மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இணையதள முகவரி

No comments:

Post a Comment