புலத்து உறவுகளின் நிலம் நோக்கிய கரிசனை எமக்கு நம்ம்பிக்கைதருகிறது இராமநாதபுரம் மகாவித்தில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வபுலம்பெயர் தமிழ்ச் சமூகம் பல்வேறு சமூகமேம்பாட்டு கைங்கரியங்களை ஊரில் வாழுகின்ற உறவுகளுக்கு செய்து வருகின்றது. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்தவர்கள் மாற்று வலுவுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதில் இன்னுமொரு கட்டமாக வட்டக்கச்சி மகவித்தியாலத்தின் பழைய மாணவனும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து அமரரான .பரஞ்சோதி மகேந்திரவரதன் அவர்களின் 19 வது வருட ஞாபகார்த்தமாக அவரது சகோதரர்களான சுவிஸில் வாழும் திருமதி.சிவநிதி பன்னீர்செல்வம் பரஞ்சோதி சந்திரவரதன் ஆகியோர் இராமநாதபுர மகா வித்தியாலத்தில் கல்விகற்கும் போரினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த மாணவிகள் ஆறு பேருக்கு துவிச்சக்கரவண்டிகளைவழங்கியிருந்தனர் .

சில வாரங்களுக்கு முன்னர் இப்பாடசாலைக்கு வருகைதந்திருந்த திருமதி.சிவநிதி பன்னீர்செல்வம் அவர்கள் போரினால் உடல் பாதிப்பிற்கு உள்ளான மாணவி உட்பட மூன்று மாணவிகளுக்கும் பாடசாலைக்கும் நிதியுதவியும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான ஏற்பாட்டை சுவிஸ் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தின் தாயாக இணைப்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடாக மேற்டிகொண்டிருந்தனர் .

துவிச்சக்கர வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு 15 . 02 .2011 இல் இராமநாதபுரம் மகாவித்தியாலய முதல்வர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுடன் அமரர் மகேந்திரவரதன் அவர்களின் தந்தையாரான காசிப்பிள்ளை பரஞ்சோதி அவர்களும் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் இன்று எம்மத்தியில் ஒரு குழப்பகரமான அரசியல் சூழல் வந்திருக்கின்றது. எமது இனத்தின் உரிமைகள் பற்றிய விடயத்தில் இன்னும் ஒருதெளிவான அரசியல் வெளிப்பாடு நிகழவில்லை அனைத்தும் சூனியமான நிலையே காணப்படுகின்றது எனவே இத்தகையதொரு சூழலில் நிலையான அபிவிருத்தி என்பது சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. அபிவிருத்தி என்னும் மாயையில் எமது உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக்க நினைப்பதை அனுமதிக்கமுடியாது முதலில் அதிகார பகிர்வுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனூடாகவே மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.
இதற்காக நாம் எம்மிடம் உள்ள தனிப்பட்ட விருப்பு வேறுப்புகளினால் உருவாகும் கருத்து வேற்றுமைகளை கழைந்து தெளிவான சிந்தனையுடன் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் . இன்றைய சூழலில் புலத்து உறவுகளின் நிலம் நோக்கிய கரிசனை எமக்கு நம்ம்பிக்கைதருகிறது . எமது மக்களின் நிலைமைகளைப் புரிந்து தேவை அறிந்து உதவுகின்ற புலம்பெயர் உறவுகளின் சீரிய பணிதனை பாராட்டி அவர்களின் கரங்களை நன்றியுணர்வோடு பற்றி நிற்கின்றோம் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


முன்னர் கிளி இராமநாதபுரம் மகாவிதியலயத்திற்கு தேவையாக இருந்த ஒலிபெருக்கி சாதனம் சுவிஸ் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டிருந்தது


நன்றி-Shritharan.com
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment