Monday, March 7, 2011

சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

15 நிமிடத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் பதுங்கியிருப்பதாகவும் கூட்டமைப்பினர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலதிக இணைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் தற்போது நொச்சிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பராளுமன்ற உறுப்பினர் விபரிக்கையில் சுமார் மூன்றுபேர் கொண்ட குழு இந்த தாக்குதல்களை நடத்தினர் என்றும் முதலில் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து வாகனத்தின் பின்புறத்திலிருந்து சரமாரியான துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டத்தது அதனைத்தொடர்ந்து வாகனம் கடுமையான சேதத்தற்குள்ளானது.

எனினும் தொடர்ந்து நாம் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தோம். அதன்பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் நாம் சென்று ஒதுங்கிக் கொண்டோம். தற்போது நொச்சிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment