Saturday, March 5, 2011

மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் விலங்கு! (பட இணைப்பு)


கீரிப்பிள்ளை இனத்தைச் சேர்ந்த இந்த விலங்குகள் ஆபிரிக்க நாடுகளில் பெருமளவு காணப்படுகின்றன.

நீண்டவால், பின்னங்காலை ஊன்றி நிற்றல் என்பன இவற்றின் சிறப்பம்சங்கள்.

முழு அளவில் வளர்ந்த இந்த வகை மிருகம் ஒன்று தனது குட்டியையும் தாவிக் கொண்டு கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்டது. தாங்கள் இருக்கும் சூழலில் தங்களுக்கு ஏதும் ஆபத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ளத்தான்
இவை இவ்வாறு நிற்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயதான தோமஸ் ரெட்டரத் என்பவர் பொட்ஸ்வானா காட்டுப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் இந்த விலங்குகள் பற்றிய விவரணம் ஒன்றைப் பார்த்த பின், அவற்றின் வாழ்வு முறை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவர் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கும், பொட்ஸ்வானாவுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இவற்றைத் தாராளமாகக் காணலாம்.

இவை 14 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.

No comments:

Post a Comment