Saturday, March 12, 2011

என்னைவிட வயதான ஹீரோக்களுடன் நடிக்க கூடாதா?: சூடான சோனாக்சி


பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகளான சோனாக்சி, தமிழில் செல்வராகவன் இயக்கும் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறார்.

இந்தியில் தபங், ஜோக்கர் ஆகிய படங்களில் பாலிவுட் ஸ்டார் ஹீரோக்களான சல்மான் கான், அக்சய் குமார் ஆகியோருடன் நடித்துள்ளார்.
கமல்ஜிக்கும் எனக்கும் இடையே 33 வயசு வித்தியாசம் இருப்பதை பெரிதாக பார்க்கிறார்கள். கேமாரா முன் நடிக்க நிற்கும் போது வயது வித்தியாசம் பெரிதாக தோன்றாது. வயசு வித்தியாசம் பார்க்காமல் இந்தியில் அக்சய், சல்மான் இவர்களுடன் நடித்துள்ளேன்.

நிஜ வாழ்க்கையில் திருமண விசயத்திற்கு கூட பெரிதாக வயதை காரணமாக காட்டுவதில்லை என்பதை யோசிக்கும்போது, என் வயதுக்கு தகுந்த ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டமுடியாது.

செல்வராகவன் சொன்ன பட ஸ்கிரிப்டை கவனமாக கேட்டேன். இது ஹாலிவுட் படத்தின் கதை என்று கூறமுடியாது. அவரோட ஒரிஜினல் படைப்பு.கதையில் வரும் கேரக்டராக படத்தில் கமல்ஜியுடன் நடிப்பேன் என்கிறார் சோனாக்சி.

தமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் 'ரத்த சரித்திரம்' படத்தில் நடித்துள்ள சத்ருகன் சின்ஹா, கமலுடன் இணைந்து நடிக்கும் தனது மகள் சோனாக்சிக்கு நடிப்பு சம்பந்தமான குறிப்புகளை கொடுத்துள்ளாராம்.

No comments:

Post a Comment