Saturday, March 12, 2011

உலகின் அதிகூடிய புத்திசாலிப் பெண்!

அல்பர்ட் ஈன்ஸ்டினை விட தனது விவேக மட்டம் அதிகமானது என்று கூறுகின்றார் 11 வயதான ரெய்னி விக்டோரியா.

விவேக மட்டச் சோதனையில் இவர் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது பொதுத் தொடர்புத் தத்துவத்தை நிறுவிய பௌதிக மேதை அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும்.

சில வாரங்களுக்கு முன் இந்த விவேகப் பரிசோதனை இடம் பெற்றுள்ளது. அதில் தனது மகள் பெற்ற முடிவை நம்ப முடியாமல் உள்ளதாக 44 வயதான தாய் எலிஸன் தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்கள் வாயிலாக விவேக மட்ட அளவு பற்றி தேடிப் பார்த்தபோது தான் இது அல்பர்ட்ஐன்ஸ்டினின் விவேக மட்டத்தை விட அதிகமானது என்பதைத் தெரிந்து கொண்டதாக இவர் மேலும் கூறினார்.

மைக்ரோ சொப்ட் அதிபர் பில் கேட்ஸின் விவேக மட்டம் 160. பிரிட்டனின் சிறந்த மூளைசாலி எனப்படும் ஸ்டீபன் ஹோகிங்கின் விவேக மட்டமும் இதே அளவு தான்.சராசரி விவேக மட்டம் 100 ஆகும்.

No comments:

Post a Comment