Tuesday, March 8, 2011

கடாபிக்காக இரண்டு பெண்களை அனுப்பிய பெர்லுஸ்கோனி


கடாபிக்கு ஆதரவளிக்க மறுத்த ஆப்பிரிக்க தலைவரை வழிக்கு கொண்டு வர 2 அழகிய பெண்களை சில்வியோ பெர்லுஸ்கோனி அனுப்பியது அம்பலமாகியுள்ளது.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை ஒடுக்க மக்கள் மீது குண்டு வீசுவதால் ஐ.நா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது அம்பலமானது. இந்நிலையில் கடாபியை எதிர்த்த தலைவரை சமாளிக்க 2 பெண்களை பெர்லுஸ்கோனி அனுப்பிய செய்தி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தற்போது பாரீசில் வசிக்கும் கடாபிக்கு நெருங்கிய முன்னாள் உதவியாளர் நூரி அல் மிஸ்மரி கூறிய விவரம்: கடந்த 2009 ம் ஆண்டு 59 நாடுகளை கொண்ட ஆப்பிரிக்க யூனியனுக்கான தலைவர் பதவிக்கு கடாபி போட்டியிட்டார்.

அவருக்கு 58 நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த போதிலும், ஒரு ஆப்பிரிக்க தலைவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை வழிக்கு கொண்டு வர கடாபியும், பெர்லுஸ்கோனியும் வித்தியாசமாக யோசித்தனர்.

அதன்படி எதிர்ப்பு தெரிவித்த தலைவரிடம் பாதுகாவலர் என்ற பெயரில் 2 அழகிய இளம் பெண்களை அனுப்பினார் பெர்லுஸ்கோனி. இளம் பெண்களின் அழகில் சரணடைந்த ஆப்பிரிக்க தலைவர் கடாபிக்கு ஆதரவாக வாக்களித்தார்.

பின்னர் கடாபி ஆப்பிரிக்க யூனியனின் தலைவரானார். தலைவராகும் ஆசையில் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட கடாபியிடம் வேலை செய்ததற்கு வெட்கப்படுகிறேன் என்று அவர் தெரிவித்தார். ஆனால் கடாபிக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவரின் பெயரை வெளியிடவில்லை

No comments:

Post a Comment