Saturday, March 5, 2011

200 வெறுமையான பக்கங்களுடன் பாலியல் தொடர்பான புத்தகம்: நூலாய்வையும் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.


பாலியலுக்கு அப்பால் ஒவ்வொரு மனிதனும் எதனை சிந்திக்கிறான்?
"ஒன்றும் இல்லை'என்று பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்.இதுதொடர்பாக அவர் நூலொன்றை எழுதியுள்ளார்.அந்தப் புத்தகமானது முன் அட்டையையும் 200 வெற்றுப் பக்கங்களையும் தவிர எதனையும் உள்ளடக்கியிருக்கவில்லை.

ஷெரீடன் சைமூவின் இந்த நூலுக்கு "பாலியலுக்கு அப்பால் ஒவ்வொரு மனிதனும் எதனைப் பற்றி சிந்திக்கிறான்?' என்று தலைப்பிட்டிருப்பதாக டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகையை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பகிடியை புரிந்துகொண்டுள்ளதுடன் புத்தகக்கடைக்குப் படையெடுக்கின்றனர்.இதன் விலை 4.69 பவுண்ஸாகும். அமேசனின் பட்டியலில் இந்த நூல் 744 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் பிரவுனின் "த டாவின்சி கோட்' (2910 ஆவது இடம்) கே.கே.ரவுலிங்கின் ஹாரிப்பொட்டர் த ஓடர் ஒவ் த போனிக்ஸ் (2406) போன்றவற்றை விட இந்நூல் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

"எனது சகாவுக்காக இந்தப் புத்தகத்தை பகிடியாக வாங்கினேன்.அதனை விரிவுரையின்போது குறிப்பு எடுப்பதற்கு அவன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான்'என்று நொட்டிங்றாம் பல்கலைக்கழக மாணவனான ஜெஸ்லோய்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.

இப்போது ஒவ்வொருவருமே இப்புத்தகத்தை வைத்திருப்பதாக தோன்றுகிறது.பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான ஆவலும் பரபரப்பும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நூலாய்வையும் ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

பால் தொடர்பான அரசியலுடன் எதனையாவது செய்ய வேண்டுமானால் மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்."கீழே போட்டுவிட முடியாது ஆழமான பார்வையுள்ளது' என்பன போன்ற கருத்துக்களை சிலர் தெரிவித்துள்ளனர்.

புத்தகத்தை வாங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியாது என்று கூட ஒருவர் கூறியுள்ளார். நூலாசிரியர் ஷெரீடன் (39 வயது) ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உளவியல் துறைப் பட்டதாரியாவர்.

No comments:

Post a Comment