Sunday, March 13, 2011

எதிர்வரும் 19ம் திகதி -Super Moon- நிகழ்வு : பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பு?!

எதிர்வரும் 19ம் திகதி சந்திரன், பூமிக்கு மிக மிக அருகாமையில் வரும் 'Super Moon' நிகழ்வினாலேயே ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவு நடைபெற்றிருப்பதாக அச்சம்வ் எளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 ம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகாமையில் அதாவது 2 இலட்சத்து 21 ஆயிரத்தி 556 மைல் தூரத்தில் நெருங்கி வருகிறது.

இதை அடுத்து வாரம் பூமியில் சுனாமி, எரிமலை வெடிப்பு உட்பட பல்வேறு பேரழிவுகள் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கு முன் 1955, 1974, 1992 ம் ஆண்டுகளில் நிகழ்ந்த சூப்பர் மூன் நிகழ்வுகளின் போது குறித்த நாட்களில் மோசமான காலநிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

பாரிய பூகம்பத்தை சந்திரனால் ஏற்படுத்த முடியாது எனவும், கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment